கொரோனா பாதிப்பால் மேடை நாடகம் மற்றும் திரையரங்குகள் ஆகியவை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன, அதனால் நெட்ப்ளிக்ஸ் மற்றும் அமேசான் சேவை தளங்கள் திரையரங்கிற்கு உதவி செய்ய வேண்டும் என ‘ஸ்கைபால்’ ‘1917’ படங்களின் இயக்குனர் சாம் மெண்டீஸ் வேண்டுகோள் வைத்துள்ளார்.
பிரபல நாளிதழ் ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் எங்களுடைய சிறப்பான நடிப்பு, தயாரிப்பு, எழுத்து, இயக்கம் ஆகிய திறமைகளை வைத்து நெட்பிளிக்ஸ் மற்றும் அமேசான் ஸ்ட்ரீமிங் இணையதளம் பல கோடி ரூபாய் வருவாயை பெற்றுள்ளது, அதே நேரத்தில் எங்களின் திறமையை நிரூபிக்க உறுதுணையாக இருந்த அந்த கலை பாரம்பரியத்தை அவர்கள் அழிய விட்டால் அது மிகப்பெரிய முரணாக இருக்கும்.
எனவே இதை நீங்கள் படித்துக் கொண்டிருப்பீர்கள் ஆனால் கலை வெளியில் இருப்பவர்கள் உங்களுக்கான தீனியை தருவார்கள் என்று மட்டும் நினைக்காமல் அனைவரையும் ஆதரிக்கும் ஒரு சுற்று சூழலை நினைக்க வேண்டும்.. இரண்டாம் உலகப் போருக்குப்பின் பிரிட்டனின் கலாச்சார வாழ்க்கைக்கு வந்துள்ள மிகப் பெரிய சவால் இது.
நடன அரங்குகள், நடன கலைஞர்கள், இசை அரங்குகள், இசை கலைஞர்கள் என அனைத்தும் அச்சுறுத்தலாக உள்ளது இந்த அரங்குகள் உயிர்பெற ஒரு திட்டம் வேண்டும் நம்மில் ஒன்று இருக்கிறது என நம்புகிறேன் இவ்வாறு அந்த நாளிதழில் எழுதியுள்ளார்.
அதுமட்டுமில்லாமல் கலைஞர் அவர்களுக்கு மானியம் கொடுக்க வேண்டும் பொழுதுபோக்குத் துறை, நாடக மேடை நாடக தயாரிப்புக்கு அரசு முதலீடு செய்ய வேண்டும் என அந்த நாளிதழில் எழுதி உள்ளார்.