உடலில் ரத்தம் வழிய வழிய வெளியானது சிவகார்த்திகேயனின் அமரான் பட ரிலீஸ் தேதி போஸ்டர்..

நடிகர் சிவகார்த்திகேயன் தற்பொழுது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படம் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே அமரன் திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது அந்த டீசரில் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடித்து மிரட்டி இருந்தார் இதனை ரசிகர்கள் பலரும் பார்த்து பாராட்டினார்கள்.

மேலும் அமரன் ரிலீஸ் செய்தியை தற்பொழுது படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் தன்னுடைய மூன்றாவது குழந்தையின் பெயர் வைக்கும் விழாவை விமர்சையாக கொண்டாடினார் அதுமட்டுமில்லாமல் அதனை வீடியோவாக சமூக வலைதளத்திலும் பதிவிட்டார்.

அந்த சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில் தற்பொழுது அமரான் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவித்துள்ளார்கள் அந்த வகையில் தீபாவளி ஸ்பெஷல் ஆக வருகின்ற அக்டோபர் 31ஆம் தேதி அமரன் திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது இது சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் ரத்தம் வழிய வழிய வெறும் பனியன் உடன் மாஸாக போஸ் கொடுத்துள்ளார்.

amaran
Exit mobile version