அமரகாவியம் பட நடிகைக்கு சத்தமில்லாமல் நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்!! மாப்பிளை இவர் தானா.

Miya-George-tamil360newz
Miya-George-tamil360newz

amarakaviyam movie actress engagement: நடிகை மியா ஜார்ஜ் தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான அமரகாவியம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் இவர் நடிகர் ஆர்யாவின் தம்பிக்கு ஜோடியாக நடித்திருப்பார். இதுவே முதல் படம் என்றாலும் இந்த திரைப்படத்தின் மூலம் இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் தமிழில் இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து, எமன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தமிழில் நடிப்பதற்கு முன்பே 2012 ஆம் ஆண்டு மலையாளத்தில் செட்டயீசு என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். மேலும் அதுமட்டுமல்லாமல் இவர் 2012ல் கேரள அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடதக்கது.

வெற்றிவேல் திரைப்படத்தில் நடிகர் சசிகுமார் உடன் இணைந்து இயல்பான சிறந்த நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்கள் மனதில் நீங்காது இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தற்போது தமிழில் விக்ரம் நடிக்கும் கோப்ரா  என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு காரணமாக நடிகை மியா ஜார்ஜுக்கு அஸ்வின் பிலிப் என்பவருடன் அவரது வீட்டில் மிகவும் சிம்பிளாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது.  மேலும் இவர்களது திருமணம் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Actress_Miya_George-tamil360newz
Actress_Miya_George-tamil360newz
miya-tamil360newz
miya-tamil360newz