நடிகை அமலாபால் சினமா வாழ்க்கை தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை வரும் ஏதாவது ஒரு சிக்கலில் சிக்கி வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அது படங்களாக இருந்தாலும் சரி அல்லது போட்டோ ஷூட் எதுவாக இருந்தாலும் அதில் கொஞ்சம் ஓவராக போவது அமலாபாலின் வழக்கம்.
அப்படிதான் சிந்துசமவெளி படத்தை நடித்து தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய ஆப்பு வைத்துக் கொண்டார் அதன் பிறகு அவ்வப்போது சிறப்பான படங்களை கொடுத்து வந்த அமலா பாலுக்கு திடீரென ரசிகர்கள் வரவேற்பு அதிகரித்து மேலும் டாப் நடிகர்கள் படங்களில் கைப்பற்றியதால் தொடமுடியாத உச்சத்தை எட்டினார்.\
இப்படி ஓடிக்கொண்டிருந்த அமலா பால் திருமண விஷயத்தில் சிக்கி சின்னாபின்னமானகியதை தொடர்ந்து சிறப்பான திரைப்படங்களில் நடித்து வந்தாலும் ஆடை படத்தின் மூலம் பல விமர்சனங்களையும் வாங்கிக் கொண்டார் அதன் பிறகு சினிமாவில் சில வருடங்களாக நடிக்காமல் இருந்து வந்த அமலா பால் திடீரென வெப்சீரிஸ் பக்கம் தலை காட்டி உள்ளார்.
அமலா பால் தெலுங்கு வெப் சீரிஸ் ஒன்றில் நடித்திருக்கிறார். u turn படத்தை எடுத்த பவன்குமார் இந்த தொடரை எடுத்துள்ளார் இந்த தொடர் முழுக்க முழுக்க த்ரில்லரை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இதில் அமலாபால் நடிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் எனவும் இது அவரது ரசிகர்களின் நல்ல தீனி போடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் முதன்மை கதாபாத்திரத்தில் அமலாபால் நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக ராகுல் விஜய் நடித்திருக்கிறார். இதுவரை பார்த்திராத அளவிற்கு வேற லெவல் திர்லர் படமாக இருப்பதாகவும் தெரிவித்தார். ஒரு போலீஸ் அதிகாரிக்கும், டெலிவரி பையனுக்கும் இடையே நடக்கும் கதைதான் இது என பவன்குமார் கூறி இருக்கிறார்.