- விவாகரத்திற்கு பிறகு தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கிக் கொண்ட அமலா பால் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்த மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.மேலும் சமீப காலங்களாக கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்பொழுது நடிகை அமலாபால் நடிப்பில் வெளிவந்த கடாவர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.
இவர் இந்த திரைப்படத்தில் பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர் பத்ரா என்ற கேரக்டரில் நடித்திருந்தார். அந்த வகையில் ஒரு எலுமை வைத்து அது ஆணா,பெண்ணா? அந்த எலும்பு யாருடையது, என அந்த எலும்பு கூறியவர் ஜாதகத்தையே தெரிந்து கொள்ளும் திறமை உடைய வல்லுனராக இருக்க கதாபாதிரத்தில் அமலா பால் நடித்திருந்தார்.
மேலும் இத்திரைப்படத்தின் இறுதியில் கடாவர் என்றால் என்ன என்பதற்கான பொருளை மிகவும் எளிமையாக விளக்கி அனைவருக்கும் புரிய வைத்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற நிலையில் இந்தப் படத்தில் நடித்ததை பற்றி சமீப பேட்டியில் சுவாரசியமான தகவல்களை ரசிகர்களிடம் பகிர்ந்திருந்தார் அமலாபால்.
அதாவது இந்த திரைப்படத்தின் பிரேத பரிசோதனை செய்யும் டாக்டர் கேரக்டரில் நடிக்க முடிவு செய்த பின்னர் இந்த படத்திற்காக பல ஆய்வுகள் செய்ததாகவும் பல மருத்துவமனைக்கு இயக்குனர்களுடன் நேரில் சென்று நிஜமாகவே பிரேத பரிசோதனை தான் பார்த்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தின் மூலம் பல விஷயங்களை கற்றுக் கொண்டதாகவும் உண்மையாகவே பிரேத பரிசோதனையை நேரில் பார்க்கும் பொழுது எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது எனவும் பேட்டியில் கூறியிருந்தார்.
இவ்வாறு இவர் கூறிய நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இவர் தன்னுடைய திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக இவ்வளவு முயற்சிகளை செய்து வருகிறார் என இவருடைய தைரியத்தை பாராட்டி வருகிறார்கள்.