ரொம்ப பண்ணுனா உன் படத்தை வெளியிட்டுருவேன் பா***ல் துன்புருத்தல் மற்றும் சொத்து மோசடி செய்த நபர். அமலா பால் கொடுத்த அதிரடி புகார்.!

amal-paul
amal-paul

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலாபால் இவர் தான் நடித்த முதல் திரைப்படத்திலேயே கவர்ச்சி கதாபாத்திரமாக நடித்திருந்தார் ஆனாலும் மைனா திரைப்படத்தில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார். அதன் பிறகு இவருக்கு படிப்படியாக பட வாய்ப்புகள் அமைந்து வந்தது ஒரு காலகட்டத்தில் தளபதி விஜய் அவர்களுடன் தலைவா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

விஜயின் தலைவா திரைப்படத்தை ஏஎல் விஜய் அவர்கள் தான் இயக்கியிருந்தார் அப்பொழுது இயக்குனர் ஏஎல் விஜய் அமலா பால் காதலிக்க தொடங்கினார் இருவரும் காதலித்து வந்தார்கள் பின்பு ஒரு காலகட்டத்தில் திருமணம் செய்து கொண்டார்கள் ஆனால் இந்த திருமணம் நீண்ட காலம் நிலைக்கவில்லை ஓரிரு வருடத்திலேயே இருவரும் மனம் ஒத்து விவாகரத்து செய்து கொண்டார்கள்.

விவாகரத்திற்கு பிறகு அமலாபால் மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார் ஆனால் ஆடை திரைப்படத்தில் அவர் நடித்ததால் பட வாய்ப்பு குறைய தொடங்கியது. எதையும் காட்டாமல் இருந்தால்தான் ரசிகர்கள் விரும்புவார்கள் எல்லாத்தையும் காட்டிய பிறகு எப்படி ரசிகர்கள்  அந்த நடிகை விரும்புவார் என ஒரு பேட்டியில் பயில்வான் ரங்கநாதன் கூறியது போல் அமலாபாலை பார்த்த பிறகு ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அமலா பாலுக்கு வரவேற்பு கொடுக்கவில்லை.

அமலா அவர்களுக்கு பாவ்நிந்தர் சிங் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது அந்த பழக்கத்தின் காரணமாக அவரின் குடும்பத்தார் மற்றும் நண்பர்களுடன் இணைந்து திரைப்பட நிறுவனம் ஒன்றை தொடங்கினார்கள் பின்னர் 2018 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் கோட்டா குப்பம் அருகே உள்ள  பெரிய முதலியார் சாவடியில் இருவரும் வீடு ஒன்றை எடுத்து தங்கி பிசினஸை கவனித்து வந்தார்கள். ஒரு காலகட்டத்தில் அவர் அமலாபாலை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டார்  அதன் பிறகு அமலாபாலம் பவ்நிந்தர் சிங் இருவரும் இறங்கி நெருங்கி பழக ஆரம்பித்தார்கள்.

ஆனால் ஒரு சில காலகட்டத்தில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட அதனால் இருவரும் பிரிந்தார்கள். ஆனால் இவர்கள் இருவரும் ஒன்றாக இருக்கும்பொழுது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இணையதளத்தில் பதிவிடுவேன் என  பவநிந்தர் சிங் மிரட்டி வருவதாக தெரிய வந்துள்ளது அது மட்டும் இல்லாமல் அமலா பாலை ஏமாற்றி சொத்துக்களை மற்றும் பணத்தையும் மோசடி செய்துள்ளதாகவும் மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தொழில் ரீதியாகவும் துன்புறுத்தல் கொடுத்ததாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமலாபால் தரப்பில் விழுப்புரம் மாவட்டம் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் புகார் மனுவின் அடிப்படையில் 29, 8, 2022 ஆம் ஆண்டு 12 பேர் மீது 16 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விழுப்புரம் மாவட்டம் குற்றப்பிரிவு காவல்துறையினர் இன்று காலை நடிகை அமலா பாலின் ஆண் நண்பர் தந்தையை கைது செய்தார்கள் அது மட்டும் இல்லாமல் மீதி 11 பேரையும் மிகவும் தீவிரமாக தேடி வருகிறார்கள் போலீசார்.

இதுகுறித்து   அமலாபாலின் வழக்கறிஞர் கூறியதாவது இருவரும் இணைந்து திரைப்பட நிறுவனம் ஒன்றை தொடங்கினார்கள் அதில் நடிகைக்கு உரிமையில்லை தானே டைரக்டர் என்பது போல் அந்த நபர் ஆவணங்களை பயன்படுத்தியதாக தெரிகிறது அது மட்டும் இல்லாமல் அமலா பாலின் புகைப்படங்களை வெளியிடுவேன் என மிரட்டி ஏமாற்றியதாகவும் அதன் மூலம் பணம் மற்றும் கார்களை அபகரித்துக் கொண்டதாகவும் நடிகையின் வழக்கறிஞர் 12 பேர் மீது புகார் கொடுத்துள்ளார்.