தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அமலாபால். இவர் விஜய் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இயக்குனர் ஏ எல் விஜயுடன் காதலில் விழுந்தார். இதனை அடுத்து இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கக்கூடாது என விஜய் கூறியதாகவும், அதை முதலில் ஏற்றுக்கொண்ட அமலாபால் பின்னர் படங்களில் நடிக்க ஆரம்பித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்கள்.
இதனையடுத்து ரத்னகுமாரின் ஆடை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது, இதன் மூலம் தமிழ் சினிமாவில் மீண்டும் முன்னணி நடிகையாக வலம் வர ஆரம்பித்து விட்டார், இவர் சமீப காலமாக ஹீரோயினுக்கு முக்கியத்தும் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது அதோ அந்த பறவை போல திரைப்படமும் ஹீரோயின் கதையம்சம் கொண்ட திரைப்படம் ஆகும்.
அதோ அந்தத் பறவைபோல திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது, சமீப காலமாக சர்ச்சை நடிகையாக வலம் வரும் அமலாபால், தனது தோழியுடன் ஹாட் டான்ஸ் கொடுத்து அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தார், அது மட்டுமில்லாமல் தனது காதலருடன் காற்று கூட புக முடியாத அளவுக்கு கட்டிப்பிடித்து கொண்டிருந்தார்.அந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் காட்டுத்தீ போல் பரவியது.
இந்நிலையில் தற்போது இவர் சீரியல் ஒன்றில் நடிக்க இருக்கிறார். மேலும் அமலாபால் மும்பையில் பிரபல பாடகர் ஒருவருடன் லிவிங்டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது, இந்த நிலையில் அமலா பால் அரைகுறை ஆடையுடன் நடுரோட்டில் நின்று முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இதைப்பார்த்த ரசிகர்கள் அந்த முத்தத்தை யாருக்கு கொடுத்துள்ளார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
#AmalaPaul pic.twitter.com/1XCYYaNFgm
— Tamil360Newz (@tamil360newz) March 17, 2020