Aamala paul latest new photo shoot : நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இந்த திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் அமலாபால் மோசமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அதனால் இவரின் இமேஜ் டேமேஜ் ஆனது.
இதனைத் தொடர்ந்து அடுத்ததாக அமலாபால் மைனா என்ற திரைப்படத்தில் நடித்து டேமேஜ் ஆன இமேஜை தூக்கி நிறுத்தினார், இந்த நிலையில் மைனா திரைப்படம் இவருக்கு நல்ல விமர்சனங்களை பெற்று கொடுத்தது அதுமட்டுமில்லாமல் ரசிகர்களிடம மிகவும் பிரபலம் அடைந்தார்.
மைனா திரைப்படத்தின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்டார், அதன்பின்பு விஜய்யின் தலைவா திரைப்படத்தில் நடித்தார் இந்த திரைப்படத்தை ஏஎல் விஜய் தான் இயக்கினார், அப்பொழுது அமலாபாலும் ஏஎல் விஜய்யும் காதலித்தார்கள் பின்பு திருமணமும் செய்துகொண்டார்கள் ஆனால் இவர்கள் திருமணம் சில வருடங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக பிரிவு ஏற்பட்டது அதனால் இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள்.
விவாகரத்து பெற்றுக்கொண்டு ஏ எல் விஜய் அவர்கள் திருமணம் செய்து கொண்டார், ஆனால் அமலாபால் விட்டதைப் பிடிக்க வேண்டும் என நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமான ஆடை திரைப்படத்தில் நடித்தார் அந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பல விமர்சனங்கள் எழுந்தது. அதுமட்டுமல்லாமல் ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து கோலிவுட்டை அதிர வைத்தார்.
இந்த நிலையில் அமலாபால் என்னதான் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகிறார், கடைசியாக அமலா பாலுக்கு அதோ அந்த பறவை போல என்ற திரைப்படம்தான் வெளியானது, தற்பொழுது கொரணா ஊரடங்கு காரணமாக பல பிரபலங்களும் வீட்டிலேயே இருக்கிறார்கள், அதனால் புகைப்படத்தை வெளியிடுவது வீடியோவை வெளியிடுவது என்பது வழக்கமாக வைத்துள்ளார்கள்.
இந்த நிலையில் அமலாபால் சமீபத்தில் பெட்ரூமில் இருந்து கொண்டே டிராயிங் வரையும் பென்சிலை வாயில் வைத்துக் கொண்டு முரட்டு போஸ் ஒன்றை கொடுத்தார், அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக அமலாபால் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது குட்டையான ட்ரவுசரில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.