சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருகிறார் விவகாரத்து நடிகை. இவர் என்னதான் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்தாலும் ஆடை இல்லாமல் நடித்த படத்திற்கு பிறகு அந்த நடிகைக்கு மார்க்கெட் குறைந்துவிட்டது.
அதன் பின்னர் அவர்கள் ஒரு திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது பிரபல இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இவர்களிடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர்.
பின்னர் பட வாய்ப்பு இல்லாமல் இருந்த அந்த நடிகை மீண்டும் ஒரு படத்தின் மூலம் ரீ என்றி கொடுத்தார். இந்த படத்தின் பிரமோஷன் பணிக்காக விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜி வீட்டில பார்ட்டி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ராஜு அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தாலும். அந்த விவகாரத்து நடிகை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கு பிறகுதான் இந்த நிகழ்ச்சி நடக்கிறது என்று பலருக்கும் தெரிய வந்தது. அப்போது நடிகை இடம் நீங்கள் உங்கள் சிறுவயதில் யாரையாவது காதலித்து உள்ளீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டனர்.
அதற்கு சற்றும் தயங்காத அந்த நடிகை நான் என்னுடைய சிறுவயதில் ஒரு பையனை காதலித்ததாக அவருடன் பலமுறை திரையரங்கிற்கு சென்றதாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல் கூட்டமே இல்லாத தியேட்டருக்கு சென்று கடைசியில் உள்ள கார்னர் சீட்டை தேடி அங்கு போய் படத்தைப் பார்ப்போம் என்றும் மேலும் நாங்கள் முத்தம் கொடுக்கும் சவுண்டை கேட்டு பலரும் எங்களை திரும்பி பார்த்ததாகவும் அந்த நிகழ்ச்சியில் கூறி இருக்கிறார்.
இது போன்ற பல சுவாரசியமான விஷயங்களையும் அந்த நடிகை கூறியிருக்கிறார். பல காதல்கள், பின்னர் திருமணமானது பின்பு விவாகரத்தும் ஆனது என அனைத்தையும் ஒன்று விடாமல் எல்லாத்தையும் கூறியிருக்கிறார்.