தமிழ் சினிமாவில் பொதுவாக கேரளாவில் இருந்து வரும் நடிகைகளுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் அந்த வகையில் நயன்தாரா அசின் என பல நடிகைகளை கூறிக்கொண்டே போகலாம். அந்த லிஸ்டில் இடம் பிடித்தவர் தான் அமலாபால். இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலில் சர்ச்சையான கதாபாத்திரத்தில் அறிமுகமானாளும் போகப் போக நேர்த்தியான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
அதேபோல் அமலாபால் முன்னணி நடிகர்களான விக்ரம், விஜய், ஆர்யா என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். இவர் விஜயுடன் தலைவா திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இயக்குனர் ஏ எல் விஜய் என்பவரை காதலித்தார். இவர்கள் இருவரும் காதலித்த பிறகு ஒரு காலகட்டத்தில் திருமணம் செய்து கொண்டார்கள்.
ஆனால் இவர்கள் திருமணம் நீண்ட காலம் நிலைக்கவில்லை ஒரு கால கட்டத்தில் இருவரும் மனமொத்து விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். அதற்குப் பிறகு அமலாபால் சினிமாவில் முழு கவனத்தை செலுத்த தொடங்கினார். கதைக்கு முக்கியதத்துவம் உள்ள படத்தைத் தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார் அந்த வகையில் ஆடை திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை அதிர்ச்சியில் உறையவைத்தார்.
அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்த அமலா பால் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பிற மொழி திரைப்படங்களிலும் தன்னுடைய அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் அடிக்கடி புகைப் படங்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் தற்பொழுது கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப் படங்கள் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது அது மட்டுமில்லாமல் லைக் அள்ளிக் குவித்து வருகிறது.