நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் முதன் முதலில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், இவர் நடித்த அந்த ஒரே ஒரு திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதில் ஒட்டிக் கொண்டார். அதன் பின்பு நடித்த மைனா திரைப்படமும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்று வெற்றிபெற்றது.
அதனைத்தொடர்ந்து தெய்வத்திருமகள், சேட்டை, காதலில் சொதப்புவது எப்படி முற்பொழுதும் உன் கற்பனையே, விஜய்யுடன் தலைவா என பல திரைப்படங்களில் நடித்து வந்தார், தலைவா திரைப்படத்தில் நடிக்கும் பொழுது இயக்குனர் விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ஆனால் இவர்களின் திருமண வாழ்க்கை ஓரிரு வருடங்களிலேயே விவாகரத்தில் முடிந்தது.
இயக்குனர் விஜய் விவாகரத்துக்குப் பிறகு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார், ஆனால் அமலாபால் விவாகரத்திற்கு பிறகு ஆடை திரைப்படத்தில் ஆடை இல்லாமல் நடித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும் கதைக்கு முக்கியத்துவம் திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அமலாபால் தற்போது அதோ அந்த பறவை போல என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்தநிலையில் ஊரடங்கு அமலில் இருப்பதால் அடிக்கடி அமலாபால் சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார், ஆடை திரைப்படத்தில் இவர் ஆடை இல்லாமல் நடித்ததால் பலரும் அவரை தவிர்த்து வந்தார்கள் அதனால் பட வாய்ப்பு குறைந்தது.
இந்தநிலையில் அமேசன் பிரைமில் ஒளிபரப்பாக இருக்கும் வெப் சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அந்த சீரியஸில் மோசமான காட்சிகளுக்கும் பிகினி உடையில் காட்சிகளுக்கும் ஓகே சொல்லிவிட்டாராம், அமலாபால் சென்சார் இருக்கும் படங்களிலேயே துணியில்லாமல் நடித்தவர் சென்சார் இல்லாத சீரியஸில் சொல்லவா வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள், எப்படியும் காட்டு காட்டுனு காட்டுவார் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.