குட்டையான உடையில் வீட்டிலேயே பார்ட்டியில் ஆடுவதுபோல் ஆட்டம் போட்ட அமலாபால். ! வைரலாகும் வீடியோ

actress Amala paul party video: நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் சிந்துசமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தனக்கான ரசிகர் வட்டத்தை பெற்றார். அதன் பின்பு மைனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் கவர்ந்தார்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்தார், பல நடிகைகள் கவர்ச்சிக்கு கண்டிஷன் போடுவார்கள் ஆனால் அமலாபால் கவர்ச்சிக்கு கண்டிஷன் போடாமல் நடித்து வந்தார்.

நடிப்பில் இவர் வெற்றி பெற்றாலும் வாழ்க்கையில் தோல்வியை சந்தித்தார். ஏனென்றால் இவர் ஏ எல் விஜய்யை திருமணம் செய்துகொண்டு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுக்கொண்டார். தற்போது அமலாபால் சினிமாவில் நடிப்பதிலேயே தனது முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார்.

இந்த நிலையில் அடிக்கடி சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டு வரும் இவர் தற்போது வீட்டிலேயே குட்டையான உடையை போட்டுக்கொண்டு பார்ட்டி வைத்துக் கொண்டாடி உள்ளார். அவர் சகோதரர் பிறந்த நாள் என்பதால் பார்ட்டியை அவர் ஏற்பாடு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.