amala paul feel in Instagram: நடிகை அமலாபால் தமிழ் தெலுங்கு மலையாளம் என பல மொழிகளிலும் முன்னணி நடிகையாக வளம் வருகிறார் தற்போது இவர் பாலிவுட்டில் கால் தடம் பதிக்க இருக்கிறார், இந்த நிலையில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதால் நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது அதனால் பல பிரபலங்களும் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அமலாபால் தற்போது ஒரு பதிவு ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்த பதிவு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, அந்த பதிவில் நடிகை அமலாபால் வெளியிட்டுள்ள தகவல் இதோ அதில் அவர் கூறியதாவது எப்பொழுதும் காதல் திருமணம் குழந்தைகள் பற்றி எல்லா கேள்விகளுக்கும் பெண்களை நோக்கியே கேள்விகள் எழுப்பப்படுகின்றன, ஆனால் ஆண்களைப் பார்த்து இந்த மாதிரியான கேள்விகளை யாரும் கேட்பதில்லை, பெண்கள் எப்பொழுதும் அடிமைத்தனம் ஆகவும் அவமானங்களை சுமந்து கொண்டும் வாழ்ந்து வருகிறார்கள்.
அதேபோல் பொருளாதாரத்தைப் பொறுத்த வரையில் பெண்கள் எப்பொழுதும் அடுத்தவர்களை சார்ந்து தான் வாழும் சூழ்நிலை ஏற்படுகிறது என்று அமலா கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது எப்பொழுதுமே பெண்களை குழந்தை பெற்று தரும் மிஷினாகவே பார்க்கிறார்கள். இதனால் பல நூற்றாண்டுகளாக பெண்கள் வலியை தாங்கிக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இதனை உச்ச கட்டமே அவளுக்குள் வளர்ந்து வரும் குழந்தை அவளை சாப்பிட கூட அனுமதிப்பதில்லை.
எப்பொழுதும் வாந்தி எடுப்பது போலவே அவர் உணர்கிறார் 9 மாதங்கள் வரை வயிற்றுக்குள் வளரும் குழந்தை வெளியே வருவது என்பது மரணத்தை போன்றதாகும். பெண் ஒருவர் ஒருமுறை கர்ப்பமாகி அதில் இருந்து மீள்வதற்குள் அவரது கணவர் அடுத்த குழந்தைக்காக அவளை கர்ப்பம் அடைய செய்ய தயாராக இருக்கிறான், பொதுவாக ஆண்கள் அனைவரும் பெண்களை மக்கள் கூட்டம் அதிகரிக்க இயந்திரமாகவே பார்க்கிறார்கள், அதேபோல் பெண்கள் வேதனையில் ஆண்கள் பங்கேற்பது இல்லை என மனவேதனையுடன் நடிகை அமலாபால் அந்த பதிவில் கூறியுள்ளார்.
மேலும் அமலாபால் கூறியதாவது ஆண்கள் பெண்களை ஒரு பாலுணர்ச்சியை பூத்தி செய்யும் பொருளாகவே பார்க்கிறார்கள் ஒருவேளை ஆண் அந்த பெண்ணை உண்மையாக காதலித்து இருந்தால் உலகில் மக்கள் தொகை அதிகரித்து இருக்காது, அதனால் ஆண் சொல்லும் காதல் என்ற வார்த்தை முற்றிலும் போலி என அமலாபால் கூறியுள்ளார், ஆண்கள் பெண்களை ஒரு வளர்ப்புப் பிராணி போல் தான் பார்க்கிறார்கள் என்பதை இந்த பதிவில் காட்டமாக கூறியுள்ளார் இந்த பதிவு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.