பொதுவாக மலையாளத்திலிருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுப்பார்கள் அந்த வகையில் நயன்தாரா அசின் எனப் பல நடிகைகளை கூறிக் கொண்டே போகலாம் அந்த லிஸ்டில் நடிகை அமலாபால் அவர்களும் மலையாளத்தில் இருந்து வந்த நடிகை தான்.
இவர் தமிழில் முதன்முதலாக சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் மாறுபட்ட கதாபாத்திரத்தில் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தாலும் அடுத்ததாக மைனா திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். இதனைத் தொடர்ந்து இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகிய தலைவா திரைப்படத்தில் அமலாபால் நடித்து இருந்தார்.
அப்பொழுது இயக்குனர் ஏ எல் விஜய் மீது காதல் வயப்பட்டு இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள் ஆனால் இந்த திருமணம் நீண்ட காலம் நிலைக்கவில்லை இருவரும் மனம் ஒத்து விவாகரத்து செய்து கொண்டார்கள் இந்த நிலையில் இருவரும் விவாகரத்துக்கு பிறகு தனித்தனியாக தங்களது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் இயக்குனர் விஜய் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு தனது வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.
அதுபோல் அமலாபால் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் அமலாபால் ஆடை திரைப்படத்தில் இவர் ஆடையில்லாமல் மிகவும் துணிச்சலாக நடித்து இருந்தார் இதனை பல பிரபலங்கள் பாராட்டினார்கள் அதுமட்டுமில்லாமல் சிலர் விமர்சனம் செய்துள்ளார்கள்.
இதுகுறித்து அமலாபால் அவர்களிடம் கேள்வி எழுப்பிய பொழுது அவர் கூறிய பதில் தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது ஏனென்றால் எனக்கு 40 கணவர்கள் இருப்பது போல் நினைத்து கொண்டேன் என கூறி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் தற்போது அமலா பால் அதோ அந்த பறவை போல என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் அப்படி இருக்கும் வகையில் தற்பொழுது அமலாபால் இளம் நடிகர் ஒருவருடன் கையில் சரக்கு பாட்டிலுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அந்த புகைப்படத்தில் இருப்பது வேறு யாரும் கிடையாது இளம் நடிகர் அதர்வா தான்.
அதர்வா மற்றும் அமலாபால் இருவரும் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்பொழுது இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.