நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் முதன்முதலாக சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் தான் நடித்த முதல் திரைப்படத்தில் ரசிகர்களை கவர்ந்தாலும். நல்ல கதாபாத்திரமாக ரசிகர்கள் மனதில் பதியவில்லை இதனை தொடர்ந்து அடுத்ததாக மைனா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்க இடத்தை பிடித்தார் இந்த திரைப்படத்தில் சிறந்த புதுமுக நடிகைக்கான விஜய் விருது சிறந்த நடிகைக்கான பிலிம் ஃபார் விருது என பரிந்துரை செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமலாபால் விகடவி, தெய்வத்திருமகள், வேட்டை காதலில் சொதப்புவது எப்படி, லவ் பெயிலியர், முப்பொழுதும் உன் கற்பனையே என்ன பல திரைப்படங்களில் நடித்து வந்தார். ஒரு காலகட்டத்தில் ஏ எல் விஜய் இயக்கத்தில் விஜய் நடித்த தலைவா திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அமலாபால் நடித்திருந்தார் அந்த திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது இயக்குனர் ஏ எல் விஜய் மீது காதல் வயப்பட்டார் இருவரும் காதலித்து வந்தார்கள் பின்பு திருமணம் செய்து கொண்டார்கள்.
ஆனால் ஒரு சில காலங்களிலேயே இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது அதனால் இருவரும் மனம் ஒத்து விவாகரத்து பெற்றுக் கொண்டு தனித்தனியாக தங்களுடைய வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள் ஏ எல் விஜய் திருமணம் செய்து கொண்டார் ஆனால் அமலா பால் மீண்டும் தமிழில் ரீஎன்றி கொடுத்து நடிக்க ஆரம்பித்தார்.
மீண்டும் ரசிகர்கள் மனதில் இடம் பிடிபதர்க்காக ஆடை படத்தில் ஆடை இல்லாமல் நடித்தார் இந்த திரைப்படத்திற்கு பிறகு அமலாபாலுக்கு பெரிதாக பட வாய்ப்பு அமையவில்லை அதற்கு காரணம் ஆடை திரைப்படத்தில் இவர் ஆடை இல்லாமல் நடித்தது தான் என பலரும் கூறுகிறார்கள். சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் அமலா பால் அடிக்கடி புகைப்படம் மற்றும் வீடியோவை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் அமலா பால் தற்பொழுது பீச்சில் நீச்சல் உடையில் சில புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் தீயாய் பரவி வருகிறது. மேலும் சமீபத்தில் தன்னுடைய முன்னாள் ஆண் நண்பர் மீது போலீசில் புகார் அளித்தார் அதனால் அவர் கைது செய்யப்பட்டார் பின்பு ஜாமினில் வெளி வந்தார்.
தற்பொழுது விசாரணை நடைபெற்று வருகிறது அந்த புகாரில் அமலா பால் தன்னிடம் இருக்கும் பணத்தை ஏமாற்றி விட்டார் எனவும் தன்னுடைய பொருட்களை அபகரித்து விட்டார் எனவும் அமலா பால் கூறியிருந்தார் ஆனால் அவரின் ஆண் நண்பர் எங்கள் இருவருக்கும் பதிவு திருமணம் நடைபெற்றது எனக்கூறி சினிமா உலகை அதிர வைத்துள்ளார். இன்னும் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.