amala paul : தமிழ் சினிமாவில் முதன்முதலாக சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை அமலா பால் இந்த திரைப்படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்களை கவர்ந்தாலும் இவர் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்ததால் இவரை விமர்சித்து வந்தார்கள்.
எப்படியாவது சிந்து சமவெளி திரைப்படத்தில் நடித்த கதாபாத்திரத்தை அழிக்க வேண்டும் என அமலா பால் மைனா திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய வரவேற்பு பெற்றார். அதன் பிறகு தான் இவருக்கு சினிமாவில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
மைனா திரைப்படத்தின் மூலம் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்தது அதேபோல் ஏ எல் விஜய் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த தலைவா திரைப்படத்தில் அமலாபால் நடித்திருந்தார். இந்த திரைப்படத்தின் மூலம் ஏ.எல். விஜய் மற்றும் அமலாபால் இருவரும் காதலிக்க ஆரம்பித்தார்கள்.
பிறகு இருவரும் திருமணமும் செய்து கொண்டார்கள் ஆனால் இவர்கள் திருமணம் நீண்ட காலம் நிலைக்கவில்லை சில மனஸ்தாபம் ஏற்பட்டு விவாகரத்து செய்துவிட்டு அவரவர்கள் வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். அமலாபால் அதன் பிறகு ஆடையில்லாமல் ஆடை திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தினார்.
விவாகரத்துக்கு பிறகு அமலா பால் மிகவும் ஜாலியாக இருந்து வந்தார் இந்த நிலையில் கவர்ச்சி உடையில் அடிக்கடி புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார், நண்பர்களுடன் பார்ட்டி அவுட்டிங் என தன்னுடைய வாழ்க்கையை என்ஜாய் பண்ண ஆரம்பித்தார்.
அப்படி இருக்கும் நிலையில் அமலா பால் தன்னுடைய நீண்ட கால நண்பரான ஜெகத் தேசையை காதலிப்பதாக கூறி அவரது பிறந்தநாளுக்கு முத்தமிட்டு டான்ஸ் அடி ப்ரொபோஸ் செய்து மோதிரத்தையும் மாற்றிக் கொண்டார்கள். இந்த நிலையில் திடீரென இருவரும் வெறும் டவலுடன் நின்று ரொமான்ஸ் செய்யும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்கள் இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.