தமிழ் சினிமா மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அமலா பால், ஆனால் ஒரு காலகட்டத்தில் இயக்குனர் ஏ எல் விஜய்யை திருமணம் செய்து கொண்டு அவர்களின் திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள்.
அதன் பிறகு அமலாபால் நடிப்பதில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார், இந்த நிலையில் அமலாபால் நடிகர் தனுஷுடன் இணைந்து வேலை இல்லா பட்டதாரி முதல் பாகத்திலும் இரண்டாவது பாகத்திலும் நடித்திருப்பார், வேலையில்லா பட்டதாரி இரண்டாவது பாகம் ரிலீஸான பொழுது அந்த திரைப்படத்தின் புரமோஷனுக்காக ரசிகர் ஒருவர் வேலையில்லா பட்டதாரி இரண்டாம் பாகத்தை அனைவரும் பாருங்கள் எனக்கு பிடித்த நடிகை அமலாபால் என கூறினார்.
உடனே ரசிகர் பேசிக்கொண்டிருக்கும்போதே அமலாபால் அந்த ரசிகருக்கு முத்தத்தை பரிசாக கொடுத்தார், இது நடந்து முடிந்து பல வருடங்கள் ஆனாலும் திடீரென இந்த வீடியோ இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
இதைப் பார்த்த சக ரசிகர்கள் அந்த ரசிகர் கொடுத்துவச்சவன்டா என கிண்டல் அடித்து வருகிறார்கள். அமலாபாலிடம் முத்தத்தை பரிசாக பெற்ற அந்த ரசிகரை பார்த்து சக ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
#AmalaPaul pic.twitter.com/O7ulRugwDp
— Tamil360Newz (@tamil360newz) June 22, 2020