அமலாபால் நடித்த அம்மா கணக்கு, சமுத்திரக்கனி நடித்த அப்பா ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த யுவஸ்ரீ தற்பொழுது மடமட என வளர்ந்து ஹீரோயின் ரேஞ்சுக்கு மாறி உள்ளார்.
இயக்குனர் அஸ்வின் ஐயர் திவாரி இயக்கத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அம்மா கணக்கு. இந்த திரைப்படத்தில் அமலா பால் அம்மாவாக நடித்து தன்னுடைய முழு நடிப்பு திறமையையும் வெளிப்படுத்தினார்.
தற்போது கவர்ச்சியில் கிறங்கடித்து வரும் அமலாபால் இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும். அமலாபாலுக்கு மகளாக நடித்தவர் யுவஸ்ரீ.
யுவஸ்ரீயின் எதார்த்தமான நடிப்பு கியூட் புன்னகை ஆகியவை குழந்தை நட்சத்திரமாக நடிக்கும் பல வாய்ப்புகளை தட்டிப் பறித்தார். அம்மா கணக்கு திரைப்படத்தை தொடர்ந்து அப்பா, காஞ்சனா 3 ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.
நடிப்பு மீது அதிக ஆர்வம் இருந்தாலும் தனது படிப்பிலும் முழு கவனம் செலுத்தி வருகிறார் அதனால் படப்பிடிப்பு மற்றும் நடிப்பதில் இருந்து சிறிது காலம் விலகி இருக்கிறார் இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த புகைப்படத்தில் யுவஸ்ரீ ஹீரோயின் போல் பக்காவாக இருக்கிறார். இதோ நெடுநெடுன்னு வளர்ந்துள்ள யுவஸ்ரீ புகைப்படங்கள்.