சைலன்டாக 2 வது திருமணத்தை முடித்து புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்.! ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த புகைப்படம்.!

amala-paul

நடிகை அமலாபால் தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் இதனைத்தொடர்ந்து மைனா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன் பக்கம் இழுத்தவர், தமிழ் சினிமா மட்டுமல்லாமல் கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழி திரைப்படத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.

விஜய் நடிப்பில் வெளியாகிய தலைவா என்ற திரைப்படத்தின் போது படத்தின் இயக்குனர் ஏ எல் விஜய்யை காதலித்தார் பின்பு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள், திருமணத்திற்கு பிறகு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார்கள். பின்பு இயக்குனர் ஏ எல் விஜய் பெண் மருத்துவர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.

அதேபோல் அமலாபால் தான் உண்டு தன் சினிமா உண்டு என சினிமாவில் நடிப்பதற்கு அதிக ஆர்வம் காட்டி வந்தார், கமர்சியல் திரைப்படத்தில் நடிப்பதை தவிர்த்து விட்டு கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படமாக தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அப்படி நடித்த ஆடை திரைப்படம் தான் மிகப்பெரிய வெற்றி பெற்றது, இதனைத்தொடர்ந்து அதோ அந்த பறவை போல என்ற திரைப்படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் அமலா பால் வடநாட்டு இசைக் கலைஞர் ஒருவரை காதலித்து வருவதாக கிசுகிசுப்பு வெளியானது, அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சி கொடுத்தார்கள், சமீபத்தில்கூட வடநாட்டு கலைஞர் பாவிந்தர் சிங்கை அமலா பால் இறுக்கி அணைத்தபடி புகைப்படம் வெளியாகியது.

இந்த நிலையில் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது அதுமட்டுமில்லாமல் அதன் புகைப்படங்களை இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

இது அந்த புகைப்படம்.

amala-paul-marriage
amala-paul-marriage
amala-paul-marriage
amala-paul-marriage