திரை உலகில் நடிக்கும் நடிகர் நடிகைகள் ஆரம்பத்தில் குணச்சிதர கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் ஒரு கட்டத்தில் ஹீரோ ஹீரோயின் என்ற அந்தஸ்தை பெற்ற பிறகு குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்க்கின்றனர் ஆனால் ஒரு சில நடிகைகள் அதையெல்லாம் பார்க்காமல்..
ஆரம்பத்தில் ஹீரோயின் ஆகவும், குணச்சித்திர கதாபாத்திரங்கள், கெஸ்ட் ரோல்களில் அடுத்து நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்கின்றனர் அந்த வகையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆரம்பத்தில் இருந்து இப்பொழுது வரையிலும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் ஹீரோயினாகவும் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார்.
இதனால் அவரது மார்க்கெட் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு பட வாய்ப்புகளும் ஏராளமாக குவிக்கின்றன. இப்பொழுது கூட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கையில் டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தீயவர்கள் கொலை நடுங்க, தி கிரேட் இந்தியன் கிச்சன், சொப்பன சுந்தரி, இடம் பொருள் ஏவல், துருவ நட்சத்திரம் மற்றும் பிறமொழி படங்களிலும் கமிட் ஆகி இருக்கிறார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்று சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நீங்கலாமே என கேள்வி கேட்டனர் அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷ் அப்படி ஒரு எண்ணமே எனக்கு கிடையாது நான் நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறேன் என கூறினார்.
மேலும் பேசிய அவர் நயன்தாராவுக்கு கல்யாணம் ஆகிவிட்டதால் நான் குறிப்பிட்ட கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன் என சொல்லப்படுகிறது முற்றிலும் வதந்தி யாரும் அதை நம்ப வேண்டாம் எனக் கூறி இந்த செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..