நான் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு போவதா.! என் ஸ்டேட்டஸ் என்ன ஆவது.? சர்ச்சையை கிளப்பும் சுந்தர் சி படம் நடிகை.

sundhar-c

பிரபல விஜய் டிவியில் பல ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்தவகையில் தற்போது உலகம் முழுவதும் பிரபலமடைந்து உள்ள ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியை பிக்பாஸ் நிகழ்ச்சியை விடவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சியில் பங்கு பெறவும் பலருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்து வருகிறது. அந்த வகையில் கோமாளியாக பங்கு பெற்று வரும் புகழ்  பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.அந்த வகையில் தற்போது தல அஜித் நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாக உள்ளது அதிலும் புகழ் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து பாலாவும் சில படங்களில் நடித்து வருகிறார்.அதோடு ஷிவாங்கியும் சில படங்களில் பாடல் பாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இவ்வாறு பிரபலமடைந்து உள்ள இந்நிகழ்ச்சி  இரண்டாவது சீசன் முடிய உள்ள நிலையில் மூன்றாவது சீசனுக்காக  ஆள் தேடி வருகிறார்கள்.

அந்த வகையில் சில படங்களில் மட்டுமே நடித்து பிரபலமடைந்தது விட்டு பிறகு காணாமல் போன நடிகை அனுயா பகவத். இவருக்கு சினிமாவில் பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தினால் சினிமாவில் தலைகாட்டாமல் வாழ்ந்து வருகிறார். இவர் நடிகர் ஜீவா,சுந்தர் சி, விஜய் போன்ற முன்னணி நடிகர் படங்களிலும் நடித்துள்ளார்.

anuya
anuya

இந்நிலையில் இவரை தற்பொழுது விஜய் டிவி குக் வித் கோமாளி சீசன் 3-இல் கலந்து கொள்வதற்கு இவரை அணுகி உள்ளார்கள். ஆனால் இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் என்னுடைய இமேஜ் என்னாவது என்னால் கலந்து கொள்ள முடியாது என்று கூறி மறுத்து விட்டாராம்.

இதனை அறிந்த ரசிகர்கள் அனுயாவை திட்டி மிகவும் கோபத்தில் இருந்து வருகிறார்கள்.