தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால் ஆரம்பத்தில் சண்டக்கோழி, திமிரு, செல்லமே, தோரணை, மலைக்கோட்டை தீராத விளையாட்டுப் பிள்ளை என தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்திருந்தாலும் அண்மைக்காலமாக இவர் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள்..
தோல்வி படங்களாக இருக்கின்றன. இதிலிருந்து மீண்டு வர சிறந்த இயக்குனர்களுடன் கைகோர்த்து நடித்து வருகிறார் விஷால்.. அந்த வகையில் விஷால் கையில் தற்பொழுது லத்தி சார்ஜ், மார்க் ஆண்டனி மற்றும் பயிரிடப்படாத ஒரு சில திரைப்படங்கள் இருக்கின்றன..
திரை உலகில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் விஷால் 45 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார். அதற்கு விஷால் காரணம் கிடையாது. விஷாலுக்கும் மற்றவர்களைப் போல திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை வாழ வேண்டும் என நினைத்தார் ஆனால் அதற்கான குடுப்பனை இன்று வரை அவருக்கு இல்லாமல் இருந்து வருகிறது.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் விஷால் பற்றி திடீரென ஒரு செய்தி வெளியாகி உள்ளது அதாவது நடிகர் விஷால் வளர்ந்து நடிகை அபிநயாவை திருமணம் செய்து கொள்ளப் போவதாக ஒரு தகவல் வெளியானது இது குறித்து நடிகை அபிநயா வெளிப்படையாக கூறியுள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது எனவென்றால்.. மார்க் ஆண்டனி படத்தில் நடித்து வருகிறேன்.
இந்த படத்தில் விஷாலும் நானும் கணவன் மனைவியாக நடிக்கிறோம்.. நிஜத்திலும் அப்படி என நினைக்கிறார்கள் ஆனால் அது வெறும் வதந்தி இதை பெரிதாக பரப்ப வேண்டாம் எனக் கூறி இந்த விஷயத்திற்கு முடிவு கட்டி உள்ளார் நடிகை அபிநயா.. இந்த தகவல் தற்போது இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.