தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் அண்மை காலமாக சினிமா உலகில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். இவர் நடிக்கும் திரைப்படங்கள் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் இதுவரை உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி, நண்பேண்டா, மனிதன், சைக்கோ..
கண்ணே கலைமானே என சொல்லிக் கொண்டே போகலாம்.. அந்த அளவிற்கு படங்களில் நடித்திருக்கிறார் ஒவ்வொரு படத்திலும் கதைக்கு என்ன தேவையோ அப்படி சிறப்பாக நடித்து கொடுத்து உள்ளார். இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும் நிஜத்தில் இவர் ஒரு அரசியல்வாதியாக இருப்பதால் மக்களை அவ்வபொழுது சந்தித்து வருகிறார்.
இதை தொடர வேண்டுமென்றால் சினிமாவை நிறுத்திக் கொள்ளதான் ஆக வேண்டும்.. இதனால் அவர் இன்னம் இரண்டு மூன்று படங்களில் நடித்துவிட்டு சினிமாவை நிறுத்திக் கொள்வார் என கூறப்படுகிறது இப்போது உதயநிதி ஸ்டாலின் கையில் மாமன்னன், கழகத் தலைவன் போன்ற படங்கள் இருக்கின்றன.
இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் சில விஷயங்களை உதயநிதி ஸ்டாலின் வெளிப்படையாக கூறி இருக்கிறார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. ஏதோ தமிழ் சினிமாவை நான் தான் காப்பாற்றுகிறேன் என்பது போல நடிப்பை நிறுத்தக்கூடாது என நிறைய பேர் சொல்லுகிறார்கள். ஆனால் நான் இன்னும் நடிக்கவே தொடங்கவில்லை..
மாமன்னன் படபிடிப்பு தொடங்கிய எட்டாவது நாள் இயக்குனர் மாரி செல்வராஜை சந்தித்து நீங்கள் நினைக்கிறது போல் நான் நடிக்கிறேனா என கேட்டேன் அதற்கு அவர் எனக்கு இன்னும் சரியா தெரியல சார் பத்து நாள் கழிச்சு சொல்லுகிறேன் என கூறி அங்கிருந்து சென்று விட்டார் இதனை நகைச்சுவையாக உதயநிதி ஸ்டாலின் சமீபத்திய பேட்டியில் கூறினார்..