ரஜினி படத்தில் நடிக்கிறேனா..? முதல் முறையாக வாய் திறந்த நடிகர் அரவிந்த்சாமி.!

rajini-
rajini-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடைசியாக நடித்த அண்ணாத்த படம் தோல்வி படமாக அமைந்ததை எடுத்து அடுத்து ஒரு ஹிட் படத்தை கொடுக்க அவர் ரெடியாக இருக்கிறார். ரஜினி தற்போது இளம் இயக்குனர் நெல்சன் உடன் கைகோர்த்து தனது 169 ஆவது திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் அந்த படத்திற்கு ஜெயிலர் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மிகப் பெரிய செட் அமைக்கப்பட்டு தற்போது படம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வயதான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடன் கைகோர்த்து  ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார் மற்றும் பல முன்னணி நடிகர் நடிகைகள் இந்த படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றனர்.

இந்த படத்தில் இன்னும் சில கதாபாத்திரங்களில் முக்கிய நடிகர்களை நடிக்க வைக்க படகுழு ஆலோசனை நடத்தி வருகிறது இந்த படத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவரது அடுத்த 170 வது படத்தில் நடிக்க ரெடியாக இருக்கிறார் அதற்கான இயக்குனரை கூட அவர் தேர்வு செய்து விட்டாராம். ரஜினியின் அடுத்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க இருக்கிறார்.

அந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக அரவிந்த் சாமியை நடிக்க வைக்க இருப்பதாக சொல்லப்பட்டு வந்தது இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் வெளிவரவில்லை ஆனால் அரவிந்த்சாமியும் ரஜினியும் இதற்கும் முன்பாக 1999 ஆம் ஆண்டு தளபதி படத்தில் அண்ணன் தம்பியாக நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட இடைவெளிக்கு பிறகு அரவிந்த்சாமி ரஜினியுடன் கைகோர்ப்பது நல்ல விஷயம் என பலரும் சொல்லி வந்தனர்.

இந்த நிலையில் பத்திரிகையாளர் ஒருவர் அரவிந்த்சாமியிடம் நீங்கள் ரஜினியுடன் கைகோர்ப்பது உறுதியா என கேட்டுள்ளனர் ஆனால் அரவிந்த்சாமி அதற்க்கு எதுவும் பதில் சொல்லாமல் அங்கிருந்து கிளம்பி உள்ளார் கேள்விக்கு பதில் அளிக்காமல் மௌனமாக இருந்ததால் ரஜினியின் அடுத்த படத்தில் இவர் நடிக்க அதிக வாய்ப்புகள் இருக்கும் என பேசப்படுகிறது.