Alya manasa tik tok video: சினிமாவில் நடிகர்-நடிகைகள் தனது திறமையை வெளிப்படுத்தி ஒரே படத்தில் பிரபலமாகி வருவது போல சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் மூலம் பல நடிகர்கள் நடிகைகள் பிரபலமடைந்துள்ளனர். குறிப்பாக ஒரே சீரியலில் பிரபலமடைந்தவர்கள் வெகு சிலரே. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பிரபலம் அடைந்தவர் ஆலியா மானசா.
ராஜா ராணி சீரியலில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஆயிரக்கணக்கான ரசிகர்களை தன்பக்கம் கவர்ந்தவர் ஆலயா மானசா என்பது குறிப்பிடத்தக்கது.ஆலயா மானசா அவர்கள் ராஜா ராணி சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஒருவர் ஆலயா மானசா. அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வந்திருந்தார் இதையெல்லாம் விட அவர் கர்ப்பமாக இருக்கும் பொழுது தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது இந்தநிலையில் தற்போது ஆலயா மானசா போரடிக்காமல் இருக்க சிம்ரனின் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா என்ற பாடலுக்கு டிக் டாக் செய்து அசத்தியுள்ளார்.அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். வீடியோ தற்பொழுது காட்டுத்தீ போல பரவி வருகிறது.
இதோ அந்த வீடியோ.
#AlyaManasa #Serialactress pic.twitter.com/kZn8Vvnocj
— Tamil360Newz (@tamil360newz) April 11, 2020