Alya Manasa : சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகையாக வருபவர் ஆலியா மானசா. முதலில் ராஜா ராணி என்னும் சீரியலில் நடித்து தன்னை பிரபலப்படுத்திக் கொண்டார் அதன் பிறகு ராஜா ராணி 2 நடித்தார். பாதியிலேயே அதிலிருந்து வெளியேறி சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா என்ற தொடரில் நடித்து வருகிறார்.
இதில் அவருக்கு நல்ல வருமானம் வந்தாலும் youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார் அதிலேயும் காசு வந்த வண்ணமே இருக்கிறது இப்படி பிஸியாக இருக்கும் ஆலியா மானசா சமீபத்திய பேட்டி ஒன்றில் நான் ரொமான்ஸ் பண்ணும் பொழுது என்னுடைய கணவரின் ரியாக்ஷன் இப்படித்தான் இருக்கும் என வெளிப்படையாக பேசி உள்ளார்..
என்னுடைய ரொமான்ஸ் காட்சிகளை பார்க்கும் போது என்ன பண்ணிக்கிட்டு இருக்க சீரியல்ல என்று கேட்பார். சீரியலில் என்னுடைய ரொமான்ஸ் பாத்துட்டு அப்பப்போ ஒரு லுக் விடுவார் மற்ற கணவர்கள் போல் தன் கணவருக்கும் பொசசிவ் ஆகும் பாத்துமா என்று சொல்வார் மற்றபடி எங்கள் இருவருக்கும் எங்களை பற்றி தெரியும்..
இவரைப் போன்று கணவர் கிடைக்க நான் தான் அதிர்ஷ்டம் பண்ணி இருக்கணும்.. கணவன் மனைவியில் எத்தனை பேர் தன் துணை வளர வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் தற்பொழுது வரும் இளைஞர்கள் மத்தியில் அதனை பார்க்க முடிகிறது என்னைப் போல..
அனைவரும் வாழ்க்கை துணை அமைக்க வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன். எனக்கும் என் கணவருக்கும் சண்டை வருகிறது என்றால் அவரு ஒண்ணுமே செஞ்சிருக்க மாட்டார் நான் தான் தப்பு பண்ணியிருப்பேன் பத்து நிமிடம் கழித்து தான் எனக்கே அது தெரியும் என்று கூறினார்.