சின்னத்திரையில் பல்வேறு விதமான சீரியல்கள் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்திழுகின்றன. அதில் குறிப்பாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகளுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது அந்த வகையில் டாப் சீரியல் நடிகைகளில் முக்கியமான பத்து இடங்களுக்குள் இருக்கும் நடிகைகளில் ஒருவர் ஆலியா மானசா.
இவர் முதலில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியின் மூலம் தான் சின்னத்திரை பக்கம் வந்தார். பின் இவரது அழகு திறமையை கண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி அசத்தினார். பின் அந்த சீரியலில் நடித்து வந்த சஞ்சீவ் என்ற நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சீரியலை தொடர்ந்து ராஜா ராணி சீசன் 2 சீரியலிலும் கதாநாயகியாக நடித்தார் ஆலியா மானசா பின் இந்த சீரியலின் பாதியில் அவர் கர்ப்பமாக இருந்ததால் சீரியலில் இருந்து விலகினார். சின்னத்திரை சீரியல் நடிகை ஆல்யா மானசாவுக்கு ஐலா ஒரு பெண் குழந்தை இருந்தது அண்மையில் இவருக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்பொழுது குழந்தைகளை பார்த்து வருவதால் ஆல்யா மானசா. சீரியலில் நடிக்காமல் இருக்கிறார் இருப்பினும் ரசிகர்களை கவர்ந்திருக்கும் வகையில் புகைப்படம் மற்றும் ரசிகர்களுடன் உரையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடினார் அப்பொழுது ரசிகர் ஒருவர் சீரியல் பக்கம் எப்பொழுது நடிக்க வருவீர்கள் என கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் பிரசவத்திற்கு பிறகு உடல் எடை தாறுமாறாக ஏறிவிட்டது அதை குறைத்துக் கொண்டுதான் நடிகை ஆரம்பிக்க வேண்டும் என பதிலளித்து உள்ளார். ரசிகர்களும் நீங்கள் சீக்கிரம் நடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டு வருகின்றனர். இச்செய்தி தற்போது இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.