மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படமான சோழர்களின் கதை வருகின்ற 30ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் மிகவும் பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தற்பொழுது இந்த படத்தில் நடிக்காமலேயே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சோழ ராணி கெட்டப்பில் இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகிய வருகிறது.
இதனால் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டு வருகிறார்கள் அதாவது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தொடர்ந்து ஏராளமான விளம்பர படங்கள் நடித்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் அந்த வகையில் தனியார் நகை கடை விளம்பரம் ஒன்றுக்காக சோழர் ராணி போன்ற கெட்டப்பில் நயன்தாரா நடித்த விளம்பர புகைப்படங்கள் தான் சமீபத்தில் வெளியாகி உள்ளது.
சோழ நாட்டின் பாரம்பரியத்தை போற்றும் வகையில் மகாராணி போல் உடைய அணிந்து பாரம்பரிய நகைகளையும் அணிந்து கொண்டு நகை கடை விளம்பரத்திற்காக அட்டகாசமாக சோழராணி கெட்டப்பில் நடித்துள்ள நயன்தாராவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இவரின் அழகை பார்த்து ரசிகர்கள் வர்ணித்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில் இது போன்ற ஒரு விளம்பரத்தை கொடுத்தால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெறும் என நயன்தாரா தான் அந்த நிறுவனத்திற்கு ஐடியா கொடுத்திருப்பதாகவும் அதனை தொடர்ந்து பிரம்மாண்டமாக போடப்பட்டுள்ள சோழர்கால செட் அமைக்கப்பட்டு இந்த விளம்பரம் படமாக எடுத்த பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பில் பொன்னியின் செல்வன் திரைப்படம் இருந்து வரும் நிலையில் அதற்கு ஏற்றார் போல் இவ்வாறு விளம்பரத்தில் நடித்தால் அது மிகப்பெரிய ரீச்சினை பெறும் என யோசித்து நயன்தாரா இதுபோன்று முடிவினை எடுத்தது ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்படுகிறது.