பொதுவாக சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் பலரும் காதலில் விழுவது வழக்கம் தான் அந்த வகையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கதை இருக்கும். சில காதல் சொல்லி தோல்வி அடைந்திருக்கும் சில காதல் சொல்லாமலே மௌனம் காத்து இருக்கும். ஆனால் அனைவருடைய வாழ்க்கையிலும் காதல் என்ற ஒன்று வந்துவிட்டு சென்றிருக்கும்.
இவ்வாறு தங்களுடைய காதல் ஜெயித்து திருமணத்தில் முடிவடைவதும் அவை பாதியிலேயே விவாகரத்தில் முடிவது சினிமாவில் வழக்கமான ஒன்றுதான் அது போன்ற பல காதல் தம்பதியர்கள் திருமணம் செய்து கொண்டு தற்போது விவாகரத்தில் வந்துள்ளார்கள்.
இப்படி தமிழ் சினிமாவில் காதலுக்கு பெயர் போன நடிகராக வலம் வருபவர் தான் சிம்பு இவர் ஆரம்பத்தில் நடிகை திரிஷாவுடன் காதலில் இருப்பதாக பல்வேறு வதந்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு முக்கிய காரணமே அலை திரைப்படம் தான் இவர்கள் இருவரும் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்து இருப்பார்கள்.
இவ்வாறு இந்த திரைப்படத்தின் மூலம் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறி இருந்தார்கள் ஆனால் இவர்கள் இருவருமே அதைப்பற்றி எதையும் காதில் வாங்காமல் அமைதிகாத்த விட்டார்கள் பின்னர் நீண்ட நாட்கள் கழித்து விண்ணைத் தாண்டி வருவாயா என்ற திரைப்படத்தில் கூட இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது ஆனால் நாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்று சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்கள்.
அதன் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா மீது சிம்புவுக்கு காதல் ஏற்பட்டதாகவும் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு வாழலாம் என்று முடிவு செய்திருந்ததாகவும் பின்னர் நமது ரஜினிகாந்த் அவசரஅவசரமாக ஐஸ்வர்யாவின் திருமணத்தை தனுஷுடன் முடித்து விட்டாராம். இதனால் சிம்பு ரொம்ப கஷ்டபட்டாராம்.
இதெல்லாம் சும்மா சுவாரஸ்யமான காதல் என்றால் நமது நயன்தாராவுடன் சிம்பு கொண்ட காதல் தான். இவர்கள் இருவரும் படு ரொமான்ஸில் இறங்கியது மட்டுமல்லாமல் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை தொடங்கியதன் காரணமாக அதிகாரப்பூர்வமாக இவர்கள் பிரிந்து விட்டார்கள்.
பின்னர் சிம்புவின் வலையில் ஹன்சிகா மோத்வானி இருந்ததாக கூறப்பட்டது ஆனால் அவரும் என்னுடைய வாழ்க்கையை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று அந்தக் காதலும் முடிவில் தோல்வியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து ஆண்ட்ரியாவுக்கும் சிம்புவுக்கும் காதல் ஏற்பட்டதாக செய்திகள் பரவின.
இவர்கள் இருவரும் இணைந்த ஒரு திரைப்படத்தில் நடித்து இருந்தார்கள் இவ்வாறு அவர்கள் நடித்த திரைப்படத்தில் வெறும் ஐந்து மணி நேரம் மட்டுமே இருவரும் சேர்ந்து நடித்ததாகவும் கூறப்படுகிறது ஆனால் தற்போது ஆண்ட்ரியா சிங்கிளா தான் இருக்கிறார் என ஆண்ட்ரியா தரப்பினர்கள் தெரிவித்துள்ளார்கள்.