பொதுவாக சினிமாவில் உச்ச நட்சத்திரத்தில் இருந்து வரும் நடிகர்களின் திரைப்படங்களில் பல நடிகைகள் அவர்களின் திரைப்படங்களில் நடித்த விட வேண்டும் என்ற ஆசையில் இருந்து வருவது வழக்கம். அதுவும் முக்கியமாக நடிகர் ரஜினிகாந்த் என்றால் சொல்லவே தேவையில்லை இவர் நடிக்கும் படத்தில் சிறிய கதாபாத்திரத்திலாவது நடித்து விட வேண்டும் என பலரும் ஆசைப்பட்டு வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் தமிழ் சினிமாவில் பத்து வருடங்களாக முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ஒருவர் இதுவரையிலும் ரஜினியுடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் கூட நடித்ததில்லை என்ற தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கமல், விஜய், அஜித், சூர்யா என தொடர்ந்து ஏராளமான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்த நடிகை பிரபல நடிகர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு பிறகு பெரிதாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வந்தார். சில இடைவெளிக்கு பிறகு மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கிய நடிகை தான் புன்னகை அரசி சினேகா.
கமலுடன் வசூல்ராஜா எம்பிபிஎஸ், விஜய்யுடன் வசீகரா, அஜித்துடன் ஜனா, தனுசு உடன் புதுக்கோட்டை போன்ற ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார் சினேகா. மேலும் ரஜினியின் சூப்பர் ஹிட் ரீமிக்ஸ் படமான முரட்டுக்காளை திரைப்படத்தில் சுந்தர்சிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
மேலும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான கோச்சடையான் திரைப்படத்தில் முதலில் சினேகா நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது ஆனால் அதன் பிறகு அந்த செய்தி வெறும் வதந்தி என கூறப்பட்டது இவ்வாறு சில திரைப்படங்களில் சினேகாவுக்கு ரஜினியுடன் சேர்ந்து நடிப்பதற்கு வாய்ப்பு கிடைப்பது போல் இருந்தாலும் அது நிறைவேறவில்லை.
தமிழ் சினிமாவில் பலரின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை சினேகா தற்பொழுது வரையிலும் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் கூட நடிக்க முடியவில்லை வருத்தத்தில் இருந்து வருகிறாராம். மேலும் இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.