மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் தற்போது சிறப்பம்சம் பல படங்களை இயக்கி வருகிறார் இருப்பினும் இவர் மலையாள சினிமாவையும் தாண்டி தமிழ் சினிமாவையும் அவ்வபோது கவனித்துக் கொண்டு வருகிறார்.
தமிழில் இவருக்கு பிடித்த நடிகர்களாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் கமல் தான் காரணம் இவர்களது அசாதாரண நடிப்பு டத்தின் வெற்றிக்கு மிகப் பெரிய அளவில் பங்காற்றுவது மட்டுமல்லாமல் தற்போது பயணிப்பது அல்போன்ஸ் புத்தரன் மிகவும் பிடித்துள்ளது.
மேலும் பிரேமம் படத்தின் பூஜையை தொடங்கும் போது கூட ரஜினி, கமல்ஆகியவர்களுக்கு நன்றி தெரிவித்த பின் தான் தொடங்கினார். சமீபத்தில் கூட கமலுடன் சமூகவலைத்தள பக்கத்தில் பேசிய அல்போன்ஸ் புத்திரன் மைக்கேல் மதன காமராஜ் படத்தை எப்படி எடுத்தீர்கள் என்று கேட்டார்.
மேலும் அதில் உங்களின் நடிப்பு வேற லெவெலில் இருந்ததோடு மட்டுமல்லாமல் அது உங்களால்தான் முடியும் என தெரிவித்தார். இதற்கு கமலும் அந்த படத்தின் பற்றிய பல டீடைலையும் அவருக்கு எடுத்துரைத்தார்.
இந்த நிலையில் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் வெற்றிமாறன் இயக்கும் “வாடிவாசல்” திரைப்படத்தையும் மிகப்பெரிய அளவில் எதிர்நோக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார் அவர் கூறியது ரத்தினக் கல்லை பார்க்க எப்படி ஆசைப்படுகிறோம் அதுபோல சூர்யா நடிப்பில் உருவாகி வரும் வாடிவாசல் திரைப்படத்தையும் நான் எதிர்பார்த்து காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.