Actor Ram Charan: நடிகர் ராம்சரண் குழந்தைக்கு அல்லு அர்ஜூன் கிப்ட் கொடுத்திருக்கும் நிலையில் அது குறித்து தகவல் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மெகா சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மகனாக சினிமாவிற்கு அறிமுகமானார் ராம்சரண். தொடர்ந்து வெற்றி திரைப்படங்களை தந்து வரும் ராம்சரண் உபாசனா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்ட நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு இந்த தம்பதியினர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
எனவே இந்த குழந்தைக்கு பல பரிசுகளை குவித்து வருகின்றனர். அப்படி தொழிலதிபர் முகேஷ் அம்பானி தங்க தொட்டிலை பரிசாக அளித்த நிலையில் இதனை எடுத்து அல்லு அர்ஜுன் தங்க ஸ்லேட் ஒன்றை க்ளின் காராவிற்கு பரிசாக அளித்துள்ளார். ராம்சரண் உபாசனா என்ற பெண்ணை கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார்.
இந்த தம்பதியினர்கள் உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டாம் என கருமுட்டையை உறைய வைத்து உரிய காலத்தில் குழந்தையை பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தனர். இந்நிலையில் கடந்த ஆண்டு இருவரும் குழந்தையை பெற்றுக் கொள்ளும் முடிவுக்கு வந்த நிலையில் உபாசனா கர்ப்பமானார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.
இதனால் ராம்சரணின் மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருக்க இவருடைய உறவினரான அல்லு அர்ஜுன் தனக்கு மருமகள் வந்துவிட்டார் என குழந்தை பிறந்த செய்தி அறிவித்ததும் உடனே தனது மனைவி சினேகா ரெட்டி உடன் மருத்துவமனைக்கு சென்று பார்த்தார். அது குறித்த வீடியோவும் சோசியல் மீடியாவில் வைரலானது.
இந்நிலையில் அல்லு அர்ஜுன் பிரத்யேகமாக க்ளின் காரா பெயர் மற்றும் பிறந்த விவரங்கள் பொறிக்கப்பட்ட பல லட்சம் மதிப்புள்ள தங்கத்திலான ஸ்டேட் ஒன்றை ராம்சரணின் மகளுக்கு வழங்கியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பு ஒரு கோடி மதிப்புள்ள தங்க தொட்டிலை தொழிலதிபர் அம்பானி ராம்சரண் மகளுக்கு பரிசாக வழங்கியிருந்தார்.