சிறந்த கதைகளை உருவாக்கி அதன் மேல் நம்பிக்கை வைத்து அந்த திரைப்படத்தை அந்த மொழியைத் தாண்டி மற்ற மொழிகளில் ரிலீஸ் செய்ய படக்குழு ஆர்வம் காட்டுகிறது அதற்கு முக்கிய காரணம் அந்த படம் மிகப்பெரிய ஒரு வசூலிக்கும் என்பது படக்குழுவின் கணிப்பாக இருக்கிறது.
ஒரு சில படங்கள் மிகப்பெரிய வசூலை அள்ளி உள்ளன அதையே தற்பொழுது செய்ய முனைப்பு காட்டுகிறது தெலுங்கில் டாப் நடிகரான அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா திரைப்படமும் ஒரே சமயத்தில் பல்வேறு மொழிகளில் வெளியாக இருக்கிறது. தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கு தாண்டி மற்ற மொழிகளிலும் கோடான கோடி ரசிகர்கள் இருப்பதால் ஒரே சமயத்தில் பிற மொழிகளுலும் படத்தை வெளியிட்டால் நல்ல லாபத்தை அள்ளலாம் என முனைப்பு காட்டி வருகிறது.
படம் ஏப்ரல் 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பது இருப்பினும் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடந்து வருவதால் அல்லி அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா ஆகியோர்கள் தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்து வருகின்றனர் அதிலும் குறிப்பாக அல்லு அர்ஜுன் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் படத்தில் நடிப்பதாகவும் இரவு, பகல் என்று பார்க்காமல் இந்த படத்திற்காக நடித்து வருவதாகவும் தெரிய வருகிறது.
மேலும் இந்த திரைப்படத்தை மிக பிரம்மாண்ட பொருட்செலவில் மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது இந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு பிளாக்பஸ்டர் படமாக அமையும் என்பது படக்குழுவின் கருத்தாக உள்ளது இந்த படத்தில் பகத் பாசில், ராஷ்மிகா மந்தனா போன்ற பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர் மேலும் சமந்தா இந்த படத்தில் நடனம் ஆடியுள்ளார்.
புஷ்பா திரைப்படம் தெலுங்கையும் தாண்டி ஹிந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் என மொழிகளில் வெளியாக இருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் தனது படத்தின் மற்ற வேலைகளை படக்குழு செய்து வருகிறது அந்த வகையில் புஷ்பா படத்தின் தமிழ்நாட்டு வெளியீட்டு உரிமையை பெரும் தொகை கொடுத்து லைகா நிறுவனம் வாங்கி உள்ளது இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.