pushpa : புஷ்பா திரைப்படம் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அனைத்து மொழிகளிலும் வெளியாகிய திரைப்படம் தான் புஷ்பா. இந்த திரைப்படம் வெளியாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்து விட்டது இந்த திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பு பலரால் ரசிக்கப்பட்டது.
மேலும் புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம் இதுவரை 350 கோடிக்கு மேல் வசூல் செய்து வசூலிலும் சாதனை படைத்துள்ளது. அதேபோல் இந்த திரைப்படத்தில் உள்ள பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
மேலும் இந்த திரைப்படத்தில் ஒரே ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளார் சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடினாலும் படத்தில் நடித்தது போல் மிகவும் பிரபலம் அடைந்து விட்டார். பல நடிகர் மற்றும் நடிகைகள் ரசிகர்கள் என அனைவரும் ஓ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி வீடியோவை சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு வந்தார்கள்.
இந்த திரைப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார். அதேபோல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் இரண்டாவது பாகம் வருவது போல் காட்டப்பட்டிருக்கும் இந்த நிலையில் விரைவில் இரண்டாவது பாகம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் அல்லு அர்ஜுன் புஷ்பா திரைப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி சமீபத்தில் பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியதாவது புஷ்பா திரைப்படத்தில் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது நான் ரொம்ப நாளாக தமிழில் வெளியாகிய பருத்திவீரன் திரைப்படத்தை போல் ஒரு கத்தாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என ஆசையாக இருந்தேன்.
அப்பொழுதுதான் சுகுமார் சாரிடம் கூறினேன் அதேபோல் சுகுமார் சார் புஷ்பா கதையை கூறினார் கதை பிடித்ததால் நடித்தேன் என கூறியுள்ளார். இந்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை நிலைநாட்டியது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதேபோல் நடிப்பில் வெளியாகிய பருத்திவீரன் திரைப்படமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.