எத்தனை கோடி சம்பளம் கொடுத்தாலும் இதனை மட்டும் செய்ய மாட்டேன் என கராராக கூறிய அல்லு அர்ஜுன்.!

allu arjun 1

பொதுவாக தமிழ் ரசிகர்களுக்கு தமிழ் நடிகர்களை மட்டுமல்லாமல் மற்ற மொழி ஹீரோக்களுக்கும் தங்களுடைய ஆதரவை அளித்து வருகிறார்கள் அந்த வகையில் ஒருவர் தான் தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் இவருக்கு தமிழில் ஏராளமான ரசிகர்கள் இருந்தார்கள்.தெலுங்கு சினிமாவில் முக்கிய ஹீரோக்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கும் அல்லு அர்ஜுனனின் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகி இந்தியா முழுவதும் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய ஒரு வெற்றியைப் பெற்ற திரைப்படம் தான் புஷ்பா. இத்திரைப்படத்தினை தெலுங்கு முன்னணி இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுனன் நடித்திருந்தார் புஷ்பா திரைப்படம் கொரோனாவுக்கு பிறகு வெளியான முதல் பான் இந்திய பிளாக்பஸ்டர் திரைப்படமாக வெளியானது.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்று இருந்த ஒட்டுமொத்த நடிகர்,நடிகைகளும் பிரபலமடைந்தார்கள் அதோடு மட்டுமல்லாமல் இடம்பெற்று இருந்த காட்சிகள்,பாடல் என அனைத்தும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இப்படிப்பட்ட நிலை புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்காக அல்லு அர்ஜுன் தயாராகி வருகிறார்.

எனவே சமீபத்தில் அல்லு அர்ஜுன் இதனை குறித்த சமீபத்திய புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருந்தார். உடனே நெட்டிசன்களும் புஷ்பா இரண்டாம் பாகத்திற்காக புதிய லுக் என்று ட்ரெண்டிங்காக்கி வந்தார்கள். ஆனால் அந்த போஸ்டர் ஒரு விளம்பத்திற்கான அட்டை புகைப்படம் என்று தெரிவித்திருந்தார் தற்பொழுது அதேபோல் ஒரு விளம்பரத்திற்காக கோடி கணக்கில் பணம் கொடுக்க அந்த நிறுவனத்திற்கு ஓகே சொல்லி இருந்தாலும் அவர் வேண்டாம் என்று மருத்து வருகிறாரா.

allu arjun
allu arjun

அதாவது குட்கா மற்றும் மதுபானம் போன்ற விளம்பரங்களுக்கு ரூபாய் பத்து கோடி சம்பளம் தருவதாக கூறியதும் அதில் அவரின் நடிக்க மாட்டேன் என உறுதியாக கூறியுள்ளாராம் எனது இந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் அனைவரும் இவரை பாராட்டி வருகிறார்கள் ஒரு விளம்பர படத்துக்கு நடிக்க சுமார் ரூபாய் 7 கோடி வசூல் செய்ததாக கூறப்படுகிறது.