தெலுங்கு சினிமா சமீபகாலமாக சிறப்பான படங்களை கொடுத்து அசத்தி வருகிறது அந்த வகையில் பாகுபலி சீரிஸை தொடர்ந்து ஒவ்வொரு இயக்குனர்களும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் வித்தியாசமான படங்களை கொடுக்க ரெடி ஆகி விட்டனர் அந்த வகையில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா.
இந்த படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்படும் போட்டுள்ளது முதல் பாகம் படத்தின் சூட்டிங் வெற்றிகரமாக நிறைவு அடைந்ததை அடுத்து வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி உலக அளவில் படம் வெளியாக இருக்கிறது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் 2023 இல் வெளியாகும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் கூட இந்த படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று போய்க்கொண்டிருக்கிறது மேலும் படத்துக்கான எதிர்பார்ப்பை தாறுமாறாக எகிற வைத்துள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் படம் வெளிவருவதற்கு முன்பாகவே 12 பேருக்கு ஸ்பெஷல் சர்ப்ரைஸ் கிப்ட் ஆக 10 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் கொடுத்துள்ளார்.
அல்லு அர்ஜுன் ஏன் இவ்வாறு அவர் செய்தார் என்பதே பலருக்கும் தற்போது ஆச்சரியத்தை கொடுத்துள்ளது காரணம். சமந்தாவும், அல்லு அர்ஜுனும் ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ஆடி உள்ளனர் இந்த படத்தின் பாடல் காட்சி ஹைதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது. இந்த படத்தின் பாடல் காட்சியை சொன்ன நாட்களுக்கு முன்பாகவே மிக விறுவிறுப்பாக படக்குழு எடுத்து அசத்தியது.
அதிலும் குறிப்பாக 12 பேர் விறுவிறுப்பாக செயல்பட்டதால் சீக்கிரமாக எடுக்கப்பட்டது இது அல்லு அர்ஜுனுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது இதனையடுத்து அவர்களை சிறப்பிக்கும் விதமாக 12 பேருக்கு ஸ்பெஷல் கிப்ட் 10 கிராம் எடையுள்ள தங்க மோதிரம் கொடுத்து அசத்தியுள்ளார் அல்லு அர்ஜுன். டைரக்டர் சுகுமார் உள்பட பலர் இந்த பரிசைப் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.