தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் அல்லு அர்ஜுன்.இவர் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி உள்ளது. இவர் ஆரம்ப காலத்தில் ஒரு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்த தற்போது ஒரு மாஸ் ஹீரோவாக நடித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் இவர் நடித்த புஷ்பா என்ற திரைப்படம் ரசிகர் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று இவருக்கு ஒரு சிறந்த வெற்றிப் படமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.
தெலுங்கு தரைப்படமான அல்லு அர்ஜுனின் திரைப்படம் தமிழகத்திலும் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்ப்பையும் பெற்று தமிழ் ரசிகர்கள் மத்தியில் ஒரு நீங்கா இடம் பிடித்தார்.
புஷ்பா திரைப்படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் வட இந்தியாவிலும் வசூல் ரீதியாக ஒரு மாபெரும் வெற்றியை கண்டது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் அதிக லாபத்தை கொடுத்துள்ளதால் அல்லு அர்ஜுனுக்கு சுமார் 100 கோடி அளவில் சம்பளத்தை அவருக்கு கொடுப்பதாக படக்குழு முடிவு செய்துள்ளது என்ற தகவல் வெளியாகியது.
அடுத்தபடியாக புஷ்பா 2 திரைப் படத்தின் பட்ஜெட்டையும் அல்லு அர்ஜுனின் சம்பளத்தையும் அதிகரிக்க உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விஜய்க்கு நிகராக சம்பளம் வாங்குவார் என்று கூறப்படுகிறது.