தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிக்கும் ஒவ்வொரு ஆக்சன் திரைப்படங்களும் ரசிகர்களையும் தாண்டி மக்களுக்கும் ரொம்ப பிடிக்கும் அதுபோலவேதான் ரசிகர்கள் மக்கள் மிகப்பெரிய அளவில் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம்தான் புஷ்பா. காரணம் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு மாறுபட்ட புதிய லுக்கில் நடித்து இருந்தார் அல்லு அர்ஜுன்.
இதனால் இந்த படத்தை பார்க்க மக்கள் மற்றும் ரசிகர்கள் காத்துக் கிடந்தனர். புஷ்பா படத்தையும் சுகுமார் வேற மாதிரியான ஒரு புதிய கோணத்தில் காட்டியிருப்பார் முதல்முறையாக செம்மரக்கடத்தலில் பற்றிய இந்த படம் பேசப்பட்டிருக்கும் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா என படத்தில் நடித்த ஒவ்வொருவரும் சிறப்பாக நடித்திருந்ததால் படம்..
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இருந்தது படமும் வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது முதல் பாகத்தை தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமும் மிக பிரமாண்ட பட்ஜெட்டில் தற்போது உருவாகி வருகிறது இந்த நிலையில் யாஷ் நடிப்பில் வெளியான கே ஜி எஃப் 2 மிரட்டும் வகையில் இருந்ததால் புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் படத்தின் தரத்தை உயர்த்த வேண்டும்.
என்பதற்காக தற்காலிகமாக படத்தை நிறுத்தி விட்டு இன்னும் கூடுதலான சுவாரஸ்யமான சில விஷயங்களை புகுத்த தற்போது முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன இது இப்படி இருக்க முதல் பாகம் சிறப்பான வெற்றி பெற்றதை தொடர்ந்து தயாரிப்பாளர் சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுனுக்கு சம்பளத்தை சற்று கூடுதலாக கொடுக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது.
அதன்படி பார்க்கையில் இப்பொழுது புஷ்பா 2 திரைப்படத்திற்காக சுமார் 100 கோடி சம்பளம் வாங்கி உள்ளார் என்ற தகவல்கள் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகின்றன அதன்படி பார்க்கையில் தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவரான விஜயின் சம்பளத்தை தற்போது அல்லு அர்ஜுனும் தொட உள்ளார் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறன.