100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர்கள் லிஸ்ட்டில் இணைந்த அல்லு அர்ஜுன்.? கோடிகளை அள்ளிக்கொடுக்கும் புஷ்பா 2..!

allu-arjun
allu-arjun

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த திரைப்படம் புஷ்பா இந்த படம் முழுக்க முழுக்க செம்மரக் கடத்தலை மையமாக வைத்து படம் உருவாகி இருந்தது இதில் அல்லு அர்ஜுனின் மாறுபட்ட நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது இவருடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனாவும் ஹீரோயினாக சூப்பராக நடித்திருந்தார்.

இந்த படம் வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது குறிப்பாக தெலுங்கையும் தாண்டி மற்ற ஏரியாகளிலும் இந்த படம் நல்ல வசூல் வேட்டை நடத்தியது ஒட்டுமொத்தமாக 300 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியதாம் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாவது பாகத்தை எடுக்க திட்டம் போட்டது..

படக்குழு அதேபோல படத்தின் ஷூட்டிங் தொடங்கியது ஆனால் படத்தின் பட்ஜெட்டுக்கு ஏற்றார் போல படத்தை சிறப்பாக கொடுக்க கதையில் சிறு மாற்றங்களை இயக்குனர் செய்து தற்பொழுது மீண்டும் இந்த படத்தின் சூட்டிங் தொடங்கி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது இந்த படத்தின் சூட்டிங் காடுமலை ஆகிய பகுதிகளில் படமாக்கப்பட்டு வருகிறதாம்.

இந்த படத்திற்காக ராஷ்மிகா மந்தனாவும் சரி அல்லு அர்ஜுனும் சரி ரொம்ப மெனக்கட்டு நடித்து வருவதாக சொல்லப்படுகிறது அதற்காக அவர்களுக்கு சம்பளத்தை உயர்த்தி கொடுக்க பட குழு திட்டம் போட்டது அந்த வகையில் தற்பொழுது அல்லு அர்ஜுன் புஷ்பா 2 திரைப்படத்திற்காக எவ்வளவு சம்பளம் வாங்க உள்ளார் என்பது குறித்து தகவலும் கிடைத்துள்ளது..

புஷ்பா 2 திரைப்படத்திற்காக நடிகர் அல்லு அர்ஜுன் சுமார் 125 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றவர்களின் வரிசையில் இவரும் இணைந்துள்ளார். முதல் பாகத்தில் கம்மியாக சம்பளம் வாங்கிய அல்லு அர்ஜுன் அவர்களுக்கு இரண்டாவது படத்தில் அதிக தொகையை கொடுத்து உள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.