சமீப காலமாக விஜய் நடிக்கும் திரைப்படங்களில் ஒவ்வொன்றும் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.மேலும் அந்த படங்கள் புதிய சாதனையைப் படைகின்றன இப்படியே போய்க் கொண்டே இருப்பதால் தொடமுடியாத உற்சாகத்தை தளபதி விஜய் அடைந்துள்ளாராம்.
சமீபத்தில் இவர் நடித்த மாஸ்டர் திரைப்படம் கூட 150 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது. இப்படி இருக்கின்ற நிலையில் புஷ்பா திரைப்படம் மாஸ்டர் திரைப்படத்தின் சாதனையை அடித்து நொறுக்கி கொண்டு ஓடிக் கொண்டே இருக்கிறது தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் புஷ்பா.
இந்த திரைப்படம் இந்திய அளவில் ஐந்து மொழிகளில் வெளியாகி தற்போது வசூல் வேட்டை கண்டு வருகிறது. புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுடன் கைகோர்த்த ராஷ்மிகா மந்தனா, சமந்தா, பகத் பாசில் போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்திருந்தனர்.
புஷ்பா படம் ஆக்ஷன், காதல், சென்டிமென்ட் என அனைத்தும் நிறைந்த ஒன்றாக புஷ்பா படம் அமைந்துள்ளதால் அனைத்து தரப்பட்ட மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது. அல்லு அர்ஜுன் நடித்த இந்த திரைப்படம் இந்திய அளவில் மட்டும் முதல் நாள் வசூலில் 71 கோடியை அள்ளி புதிய சாதனை படைத்தது.
புஷ்பா படம் தற்போது மிகப்பெரிய ஒரு தொகையை அள்ளியத்தோடு மட்டுமல்லாமல் பல்வேறு நடிகர்களின் படங்களின் சாதனையை முறையடித்து உள்ளது அதிலும் குறிப்பாக மாஸ்டர் படத்தின் சாதனையை ஓவர் டேக் செய்துள்ளது. இதனை மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு உள்ளது.