ரியல் NO.1 விஜய் கிடையாது அல்லு அர்ஜுனன் தான்.! சம்பளம் எவ்வளவு தெரியுமா.? அதிர்ந்து போன ரசிகர்கள்..

vijay
vijay

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் அல்லு அர்ஜுன் நடிகர் பிரபாஸை விட அதிக சம்பளம் வாங்கும் தெலுங்கு நட்சத்திரமாக விளங்கி வருகிறார் இது அனைவர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் விஜயை கொண்டாடப்பட்டாலும் ரியலாக அல்லு அர்ஜுன் தான் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறாராம்.

இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்காவின் இயக்கத்தில் ஹிந்தியில் வெளியான திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அல்லு அர்ஜுன் அறிமுகமான நிலையில் பிறகு தொடர்ந்து தென்னிந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக இவர் திகழ்ந்து வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

பான் இந்தியா படங்கள் மூலம்  பாலிவுட்டுக்கும் அறிமுகமானார். டி-சீரிஸ் தயாரிப்பிற்காக அல்லு அர்ஜுன் ரூபாய் 125 கோடி சம்பளம் பேச்சு பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது இவ்வாறு இதன் மூலம் டோலிவுட்டில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் பிரபாஸை மிஞ்சு உள்ளார் அல்லு அர்ஜுன். பிரபாஸ் தற்பொழுது ஒரு படத்திற்கு 100 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக விஜய் இருந்து வரும் நிலையில் அவருடைய சாதனையை அல்லு அர்ஜுன் முறியடித்துள்ளார் மேலும் தற்பொழுது இவர் தென்னிந்திய சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக திகழ்ந்துவரும் நிலையில் இவர்தான் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறார்.

தற்பொழுது அல்லு அர்ஜுன் புஷ்பா படத்தின் 2வது பாகத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அல்லு அர்ஜுனனுடன் இணைந்து பகத் பாஸில், ராஷ்மிகா மந்தனா ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தை மைத்திரி மூவி மேக்கர்ஸ் மற்றும் முட்டம்செட்டி மீடியா நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது.