அஞ்சனா கேட்ட கேள்விக்கு பதிலளிக்காமல் கையை தட்டிவிட்டு சரசரவென கீழே இறங்கிய அல்லு அர்ஜுன் – விளக்கம் கொடுக்கும் விஜே.!

allu-arjun-and-anjana
allu-arjun-and-anjana

தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் நடிப்பில் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் புஷ்பா இந்த திரைப்படம் ஐந்து மொழிகளில் வெளியானது. இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கி வருகிறது படம் முற்றிலும் வேறுபட்ட கதாபாத்திரம் கதைக்களம் என்பதால் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

புஷ்பா படம் முதல் வாரத்தில் மட்டும் சுமார் 229  கோடியை அள்ளி உலக அளவில் கைப்பற்றியுள்ளது. இதனால் புஷ்பா படக்குழு சந்தோஷத்தில் இருக்கிறது முதல் வாரத்தில் மட்டுமே இவ்வளவு கோடி என்பது மிகப்பெரிய ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது இன்னும் சிறப்பாக ஓடிக் கொண்டிருப்பதால் இன்னும் வருகின்ற நாட்களில் நல்லதொரு வசூல் வேட்டை என்பது படக்குழுவின் கணிப்பாக இருக்கிறது இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் கைகோர்த்தராஷ்மிகா மந்தனா, சமந்தா, பகத் பாசில் மற்றும் பல நட்சத்திர பட்டாளங்கள் படத்தின் கதைக்கு ஏற்றவாறு நடித்து அசத்தி இருந்தனர்.

அல்லு அர்ஜுன் மற்றும் படக்குழு புஷ்பா திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக பல்வேறு இடங்களுக்கு சென்று கலந்து கொண்டு வருகிறது அந்த வகையில் அண்மையில சென்னையில் இந்த ப்ரமோஷன் பணிகளுக்காக அல்லு அர்ஜுன் மற்றும் படக்குழு கலந்து கொண்டது.

இந்த நிகழ்ச்சியை பிரபல தொகுப்பாளினி அஞ்சனா தொகுத்து வழங்கினார் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள பாடலுக்கு இரண்டு ஸ்டெப் டான்ஸ் ஆடுங்கள் என அஞ்சனா கேட்டதற்கு அஞ்சனா கையை தட்டி விட்டு அங்கிருந்து சென்றார் அல்லு அர்ஜுன். அஞ்சனா கேள்விக்கு மதிப்பளிக்காமல் அவர் கையை தட்டி விட்டு சென்றது அங்கு பரபரப்பானது.

அஞ்சனா இதுகுறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூறியது அந்த நிகழ்ச்சிக்காக வழங்கப்பட்டிருந்த நேரம் முடிந்துவிட்டது இதனை கருத்து கொண்ட நேரமின்மை காரணமாக நான் 2-step டான்ஸ் ஆட சொல்லிய போதும் அதனை நாகரிகமாக மறுத்துவிட்டார் அல்லு அர்ஜுன் இதுதான் நடந்தது இதை பெரிதாக வேண்டாம் என விளக்கம் அளித்தார் அதே நேரத்தில் நான் கேட்ட கேள்வியால் கோபமடைந்த மேடையிலிருந்து இறங்கினார் என்பது தவறான தகவல் என்று விளக்கமளித்துள்ளார். இது அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.