தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்து ஓடிக்கொண்டிருந்த தளபதி விஜய் தற்பொழுது தென்னிந்திய சினிமா உலகம் முழுவதும் பிரபலமடைய தெலுங்கு பக்கமும் தற்பொழுது கவனம் செலுத்து வருகிறார் அந்த வகையில் விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருக்கிறது.
இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார் தில் ராஜு மிக பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறார்கள். இந்த படத்தில் விஜய் உடன் கைகோர்த்து ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ்ராஜ், குஷ்பூ, சங்கீதா, யோகி பாபு, சரத்குமார், ஷாம், ஸ்ரீகாந்த் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.
இந்த படத்தின் இறுதி படப்பிடிப்பு சென்னையில் போய்க் கொண்டிருக்கிறது அதனை தொடர்ந்து டப்பிங் பணிகளில் கவனம் செலுத்தும் என தெரிய வருகிறது. வாரிசு படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக ரிலீசாக இருக்கிறது இப்படி இருக்கின்ற விஜய் வாரிசு திரைப்படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டது எப்படி என்பது குறித்து வம்சி வெளிப்படையாக கூறியுள்ளார்.
விஜயை சந்திக்க அவரது வீட்டுக்கு சென்றேன் அவரே என்னை வரவேற்று உபசரித்தார் தொடர்ந்து கதை கூற தொடங்கினேன்.. ஒரு இடத்தில் கூட பேசாமல் முழு கதையையும் பொறுமையாக கேட்டார் இடையில் எனக்கு பயத்தில் வேர்க்க துவங்கியது இதை கூட கவனித்த விஜய் ஏசியை அதிகரித்தார்.
கிளைமாக்ஸ் வரை சொல்லி முடித்தேன் சில நொடிகள் சத்தமே இல்லை பின்னர் குரலை உயர்த்திக்கொண்டு சரி பண்ணலாம் என சுருக்கமாக முடித்துக் கொண்டார் அதுவே பெரிய ஆச்சரிய அதிர்ச்சியாக இருந்தது என வம்சி கூறினார்.. தற்பொழுது இந்த தகவல் இணையதள பக்கத்தில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.