தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் நடிகர் அஜித். இவர் தற்போது எச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தின் சில காட்சிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் துணிவு திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் ஒரு பாடலை பாடியுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் இந்த தகவல் உண்மை என்பதற்கு பதிலாக ஜிப்ரானும் அனிருத்தும் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டு இணையத்தில் வெளியிட்டிருந்தனர்.
பொங்கலில் வெளியாகியுள்ள துணிவு படத்துடன் வாரிசு மோத உள்ளதால் ரசிகர் மத்தியில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது அதுமட்டுமல்லாமல் இந்த இரண்டு படத்தில் எந்த படம் வெற்றி அடையும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் இந்த நிலையில் எதிர்பார்ப்பில் வெளியாகும் வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் குறித்து அடிக்கடி அப்டேட்டுகள் வெளியாகி கொண்டே வருகிறது.
இந்த நிலையில் துணிவு படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் அஜித் அவர்கள் கலந்து கொள்ளப் போகிறார் என்று சில தினங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகி கொண்டே இருந்தது. ஆனால் இவை அனைத்திற்கும் உதயநிதி செய்த தில்லுமுல்லு வேலை தான் என்று தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது துணிவு பட பிரமோஷன் நிகழ்ச்சிக்கு அஜித் வருவதாக கடந்த சில நாட்களாக இணையதளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது இந்த புரளியை கிளப்பி விட்டது நடிகர் அரசியல்வாதி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தான் ஏனென்றால் அஜித் அவர்கள் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என்றாலே துணிவு படத்தின் வெற்றி வேற லெவலுக்கு இருக்கும் என்று எதிர்பார்த்தார்.
பொதுவாக அஜித் யாருடைய பிரமோஷன் நிகழ்ச்சிக்காகவும் பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டார் அது மட்டுமல்லாமல் அவர் நடிக்கும் படங்களாக இருந்தாலும் சரி பிரமோஷன் நிகழ்ச்சியில் கூட பங்கேற்றுக் கொள்ள மாட்டார் இது எல்லாம் தெரிந்தும் உதயநிதி ஸ்டாலின் இப்படி ஒரு புரளியை கிளப்பி விட்டு இருக்கிறார்.
இந்த புரளி நடிகர் அஜித்துக்கு தெரியவே படத்திற்கு ப்ரமோஷன் தேவை இல்லை என்று சமீபத்தில் சமூக வலைதளத்தில் அஜித் கருத்து பதிவு வைத்திருந்தார். இனி என்னுடைய பெயரை என்னுடைய அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும் தயாரிப்பாளரிடம் உச்சகட்ட கோபத்தை காட்டியிருக்கிறார்.