இப்பொழுது வரும் விமர்சனங்கள் எல்லாம் கேட்கிற மாதிரியே இல்லை – ஹெச். வினோத் காட்டம்..

vinoth
vinoth

அஜித்திற்கு ஒருவரை பிடித்து விட்டால் அவரிடம் தொடர்ந்து படம் பண்ணுவது வழக்கம் அந்த வகையில் தற்போது இயக்குனர் ஹச். வினோத்துடன்  மூன்றாவது முறையாக கைகோர்த்து தனது 66 வது திரைப்படமான துணிவு படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படம் முழுக்க முழுக்க ஒரு உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு உருவாகி உள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் அஜித் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் செம்ம மாஸாக நடித்துள்ளார். படம் அடுத்த வருடம் பொங்கலை முன்னிட்டு கோலாகலமாக வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் இருந்து இதுவரை பர்ஸ்ட் லுக், செகண்ட் போஸ்டர்கள் வெளிவந்தன அதனைத் தொடர்ந்து அண்மையில்  சில்லா சில்லா பாடல் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று அசத்தியது.

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த அப்டேட்டுகளும் படக்குழு கொடுக்க இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் துணிவு இயக்குனர் வினோத் அண்மையில் சில தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார் அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. அதில் ஒன்றாக விமர்சனங்கள் குறித்து தனது கோபத்தை வெளியே கொட்டி உள்ளார் ஹச் வினோத் அவர் கூறியது..

ஒரு இயக்குனராக படத்தின் மீது உள்ள விமர்சனங்களை கேட்க வேண்டியது என்னுடைய கடமை விமர்சனங்களை மண்டைக்குள் ஏற்றிக்கொள்ள மாட்டேன்.. நியாயமான விமர்சனங்களை கேட்பேன் முடிந்தால் திருத்திக் கொள்வேன் ஆனால் தற்பொழுது உள்ள விமர்சனங்கள் எல்லாம் அரிவாளை எடுத்துவெட்டும் அளவுக்கு வன்மமாக மாறிடுச்சு அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் கடந்து போவதே சரி என நினைக்கிறேன்.

மேலும் பேசிய அவர் வலிமை தோல்வி படமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் வலிமையில் ரிலீசான பொழுது கலவையான விமர்சனங்கள் வந்தது உண்மைதான் ஆனால் ஃபேமிலி ஆடியன்ஸ்க்கு படம் பிடித்து போனது பணம் போட்ட தயாரிப்பாளர்கள் தொடங்கிய அனைவருமே அதை வெற்றி படமாக அமைந்தது. நான் பார்த்த வேலைக்கான வெற்றியை வலிமை எனக்கு கொடுத்தது என்பது தான் உண்மை என கூறினார்.