தென்னிந்திய சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் மணிரத்தினம் பல இயக்குனர்களின் கனவை மணிரத்தினம் நினைவாக்கியுள்ளார். அதாவது நீண்ட பெரும் நாவலான பொன்னியின் செல்வன் கதையினை திரைப்படமாக்க வேண்டும் என பலரும் முயற்சித்து வந்தார்கள் தற்பொழுது தான் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுத்துள்ளார்.
இந்த படத்தின் முதல் பாகம் முழுமையாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில் வருகின்ற 30ஆம் தேதி அன்று மிகவும் பிரம்மாண்டமாக உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது மேலும் தற்பொழுது இந்த திரைப்படத்தின் பிரமோஷன் பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் அரசர்கள்,அரசிகள், இளவரசிகள் உள்ளிட்ட பலவேறு கேரக்டர்கள் நடித்துள்ளார்கள். அரசர், அரசிகள் என்றாலே முக்கியமானது நகைகள் தான் அனைவரும் ஏராளமான நகைகளை அணிந்திருப்பார்கள் பல கோடி மதிப்புள்ள நகைகள் அணிந்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்று தற்பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் நகைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பெரும்பாலும் அரசன், அரசிகள் நடிக்கும் கேரக்டருக்கு டூப்ளிகேட் நகைகளை தான் பயன்படுத்துவார்கள். ஆனால் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் உண்மையான நகைகளை பயன்படுத்தி உள்ளதாக தற்பொழுது தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நகைகளை இவர்கள் பணம் கொடுத்து வாங்கவில்லை ஜுவல்லரி நிறுவனம் ஒன்று இந்த படத்திற்கு தேவையான அனைத்து நகைகளையும் கொடுத்து உதவியதாகவும் இதனை அடுத்தது இந்த நிறுவனம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ஜுவல்லரி பார்ட்னர் என லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அறிவித்துள்ளது.
இந்த திரைப்படத்தில் முக்கியமான வேடங்களில் ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட இன்னும் பல நடிகைகளும் அணிந்து இருந்தது உண்மையான தங்க நகைகள் தான். இவர்கள் போஸ்டர் வெளியாகும் பொழுது ரசிகர்களின் கண்ணை கவரும் வகையில் மிகவும் அழகாக இருந்தார்கள் மேலும் அதன் நகைகளும் மிகவும் அழகாக இருந்தது தற்பொழுது தான் இது உண்மையான தங்க நகைகள் என்பது தெரிய வந்துள்ளது.
இந்த படத்தில் விக்ரம்,கார்த்தி,ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, விக்ரம் பிரபு, பிரபு, ஜெயம்ராம்,ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார்,பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், அஸ்வின், நிழல்கள் ரவி,ரியாஸ் கான், லால், மோகன் ராம், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இந்த திரைப்படத்தினை லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
மேலும் இப்படத்திற்கு ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ள நிலையில் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி அன்று தமிழ்,ஹிந்தி,தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் 5 மொழிகளில் வெளியாக இருக்கிறது.
All that glitters is gold! Glad to have @KishanDasandCo as our jewellery sponsors for #PS1 !
In theatres on 30th September in Tamil, Hindi, Telugu, Malayalam and Kannada! #ManiRatnam #ARRahman #PonniyinSelvan @madrastalkies_ @arrahman @tipsofficial @primevideoin pic.twitter.com/htSn2bnjce
— Lyca Productions (@LycaProductions) August 8, 2022