அடக்கடவுளே எல்லா நல்ல கதைகளும் எனக்கு வருதே..! டுவிட்டரில் புலம்பும் எஸ்ஜே சூர்யா..!

sj-surya
sj-surya

வெகு வருடங்கள் கழித்து இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில்  நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாநாடு இந்த திரைப்படம் டைம் லூப் அடிப்படையில் வெளிவந்த திரைப்படமாகும்.

இவ்வாறு வெளிவந்த இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் சிம்பு நடித்தது மட்டுமில்லாமல் நாயகியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருப்பார் அதேபோல வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து  பெருமளவு புகழ் பெற்ற ஒரு நடிகர்தான் எஸ் ஜே சூர்யா.

இந்த திரைப்படத்தில் சிம்பு நடிப்பை காட்டிலும் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பை ரசிகர்கள் பெருமளவு கொண்டாடினார்கள் என்று கூறலாம் ஏனெனில் அவருக்கு கொடுத்த கதாபாத்திரம் மிகவும் சிறந்த அம்சம் உடையதாக இருந்தது மட்டுமில்லாமல் இதை தொடர்ந்து பேசிய சூர்யாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருக்கிறது.

இந்நிலையில் ஒரு சிறந்த கதாபாத்திரத்தில் நடிகர்  எஸ் ஜே சூர்யா சமீபத்தில் கமிட்டாகியுள்ளார் அதாவது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் என்ற திரைப்படத்தில் விஷால் தான் கதாநாயகனாக நடிக்க உள்ளாராம். நிலையில் இந்த அப்டேட் பற்றி எஸ் ஜே சூர்யா சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளார்.

அதாவது எஸ் ஜே சூர்யா கூறியது என்னவென்றால் அட கடவுளே எல்லா நல்ல கதையையும் என்கிட்டயே கொடுக்கிறீர்களே இயக்குனர் ஆதிக் ரவி சமீபத்தில் கூரிய கதையை கேட்டு நான் வியந்து போய் விட்டேன். இத மாநாடு இரண்டாம் பாகம் என்று கூட சொல்லலாம்  அவ்வளவு அம்சமாக இருக்கிறது என இதை சூர்யா குறிப்பிட்டுள்ளார்.