இந்த பிரச்சனைக்கெல்லாம் பாலா தான் காரணம்..! உண்மையை புட்டு புட்டு வைத்த பிரபல தயாரிப்பாளர்..!

bala-03

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளம் கொண்ட திரைப்படங்களை இயக்கி தனக்கென ஒரு பாதையை அமைத்துக் கொண்டவர்தான் இயக்குனர் பாலா அந்த வகையில் இவருடைய இயக்கத்தில் வெளியான சேது, நந்தா, பிதாமகன், நான் கடவுள் போன்ற ஒவ்வொரு திரைப்படங்களுமே ரசிகர் மத்தியில் தனித்துவத்தை ஏற்படுத்தியது.

பொதுவாக இவர் இயக்கும் ஒவ்வொரு திரைப்படங்களுமே எளிய மனிதர்களின் வாழ்க்கையை மிகவும் நெருக்கமாக காட்டும் அளவிற்கு இருக்கும் அந்த வகையில் இவை சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்துவது மட்டுமில்லாமல் இவர் இயக்கத்தில் பாறை கற்கள் கூட மிகவும் அற்புதமாக நடிக்கும் என்பதை உணர்த்தி விடுவார்.

அந்த அளவிற்கு இவருடைய இயக்கம் கொடுமையாக இருக்கும் ஏனெனில் திரைப்படத்தில் ஒழுங்காக நடிக்கவில்லை என்றால் நடிகர்களை மோசமாக திட்டுவது அடிப்பது போன்ற செயல்களையும் செய்யக்கூடியவர் இதன் காரணமாகவே இயக்குனர் பாலாவை பலரும் கரடு முரடான இயக்குனர் என்று கூறுவது வழக்கம்.

இப்படி இருக்கும் நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் உருவான வர்மா என்ற திரைப்படம் சில காரணத்தின் மூலமாக திரையரங்கில் வெளியாகவில்லை அதன் பிறகு இவருடைய இயக்கத்தில் ஆதித்யா வர்மா என்ற பெயரில் அதே பாவனையில் அந்த திரைப்படம் வெளியானது ஆனால் வர்மா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானது.

மேலும் இந்த திரைப்படங்களை தொடர்ந்து தற்பொழுது தன்னுடைய ஆஸ்தான நடிகர் சூர்யாவை வைத்து வணங்கான் என்ற திரைப்படத்தை இயக்கி வந்தார் ஆனால் இந்த திரைப்படமும் தற்பொழுது டிராப் ஆகிவிட்டது இன் நிலையில் பிரபல தயாரிப்பாளர் மற்றும் நடிகரான சித்ரா லட்சுமணன் பாலாவின் திரைப்படங்கள் தொடர்ந்து பிரச்சனையை சந்தித்து வருகிறது அதற்கு என்ன காரணம் என்ன என்று அவர் தெரிவித்துள்ளார்.

பொதுவாக பாலா இயக்கும் திரைப்படத்தில் ஏதேனும் ஒரு பிரச்சனை வந்தால் அப்பொழுது நடிகர்களை குறை சொல்லலாம் ஆனால் இவருடைய திரைப்படம் என்றாலே பிரச்சினை வரும் பொழுது அவற்றிற்கு முழுக்க முழுக்க பாலா தான் காரணம் என்று கூறியுள்ளார் ஆகையால் பாலா தான் யோசித்து இதற்கு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

bala-02
bala-02

என்று கூறியது மட்டும் இல்லாமல் பாலாவிடம் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது அந்த பிரச்சனையை பாலா வெளி காட்டினால் மட்டுமே தொடர்ந்து அவர் வெற்றிகரமாக பயணிக்க முடியும் அப்படி இல்லை என்றால் விமர்சனம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கும் அவர் தன்னை தானே திருத்தினால் மட்டுமே நீடிக்கலாம் இதுதான் என்னுடைய கருத்து என்று கூறியுள்ளார்.