நடிகர் ஜெய் தமிழ் சினிமா உலகில் முதலில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமடைந்தார். பின்பு இவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது அதை சரியாக பயன்படுத்தி தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுக்க ஆரம்பித்தார்.
அந்தவகையில் நடிகர் ஜெய் கோவா, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, சுப்ரமணியபுரம், வலியவன், சென்னை 600028 போன்ற படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தன. இப்படி ஓடிக்கொண்டிருந்தாலும், இவர் நடிக்கும் திரைப்படங்கள் தோல்வி படங்களாக மாறியதை..
அடுத்து இப்போது பட வாய்ப்புகள் சுத்தமாக கிடைக்காமல் இருந்து வருகிறார். இந்த நிலையில் நடிகர் ஜெய் இயக்குனரும் நடிகருமான சுந்தர் சியுடன் இணைந்து பட்டாம்பூச்சி படத்தில் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்துக்கான நேர்காணல் ஒன்றில் அண்மையில் கலந்து கொண்டார்.
அப்போது சில விஷயங்களை பகிர்ந்துள்ளார் அவர் சொன்னது. ஆரம்பத்தில் சென்னை 600028, கோவா போன்ற படங்களில் நடித்தீர்கள் ஆனால் அதன்பிறகு நீங்கள் நடித்த தமிழரசி கனிமொழி போன்ற படங்கள் வெற்றியை ருசிக்க வில்லை ஏன் என கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்தது.
அந்த சமயம் சுப்பிரமணியபுரம் இயக்குனர் சசிகுமாருடன் சுமார் ஒன்றரை வருடம் பயணித்தேன் அதனால் அப்போது கமர்ஷியல் படங்களில் நடிக்க முடியவில்லை வித்தியாசமான நல்ல கதைகளை தேர்வு செய்தேன் ஆனால் அது சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை என வெளிப்படையாக கூறி முடித்தார் நடிகர் ஜெய். அதை வைத்து அவர் சொல்லும் போதே தெரிகிறது இனி நடிகர் ஜெய் பெரிதும் கமர்ஷியல் படங்களில் அதிகம் நடிப்பார் என தெரியவருகிறது.