ஒட்டுமொத்த ரெக்கார்டையும் அடித்து தும்சம் செய்த விஜய்யின் பீஸ்ட்.! இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு…

beast
beast

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீசாகி உள்ளது மேலும் இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, யோகி பாபு, செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

பீஸ்ட் திரைப் படத்தைப் பார்ப்பதற்காக பிரபலங்கள் பலரும் 4:00 காட்சிக்கு திரையரங்கம் சென்றுள்ளார்கள் அந்தவகையில் அனிருத், நெல்சன், பூஜா ஹெக்டே ஆகியோர்களும் திரையரங்கிற்கு சென்றுள்ளார்கள். மேலும் பீஸ்ட் திரைப்படத்தை மிகவும் பிரமாண்டமாக தயாரித்துள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம் அனிருத் இசையில் ஒவ்வொரு பாடலும் பட்டிதொட்டி எங்கும் பிரபலமானது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

இந்த நிலையில் பீஸ்ட் எப்படி இருக்கிறது என பல்வேறு மக்களிடம் இருந்து  கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது. அதேபோல் படத்தைப் பார்த்த பிரபலங்களும் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள் சமூகவலைதளத்தில். இந்த நிலையில் விமர்சன ரீதியாக சில கலவையான கருத்துக்கள் வந்தாலும் வசூல் ரீதியாக என்ன நிலையில் இருப்பது என்பதை இங்கே காணலாம்.

அப்படி இருக்கும் வகையில் சன் பிக்சர் நிறுவனத்தின் சீப் ஆப்பரேட்டிங் ஆபீசர் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பீஸ்ட் படம் குறித்து தற்போது ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அந்த தகவல் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

அதாவது பீஸ்ட் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது எனவும் இதற்கு முன் உள்ள அனைத்து ரெக்கார்டையும் அடித்து தும்சம் செய்துள்ளது எனவும் கூறியுள்ளார் அதுமட்டுமில்லாமல் அனைவருக்கும் நன்றி எனவும் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் விஜய் ரசிகர்களிடையே மிகப்பெரிய வைரலாகி வருகிறது அதுமட்டுமில்லாமல் அனைத்து ரெக்கார்டையும் உடைத்து உள்ளது என்பதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

பீஸ்ட் விமர்சனம்..